தக்காளி தொக்கு இப்படி செஞ்சி பாருங்க.

தக்காளி தொக்கு இப்படி செஞ்சி பாருங்க. ஒரு மாசம் ஆனாலும் கெட்டே போகாது. இட்லி தோசை சாதம் எல்லாத்துக்கும் வெச்சி சாப்பிட செம்மையா இருக்கும்
தக்காளி தொக்கு செய்முறை விளக்கம்: தக்காளி தொக்கு செய்ய ஒரு கிலோ தக்காளியை பெரிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக அடுப்பை பற்ற வைத்து குக்கர் வைத்து அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து ஒரு கைப்பிடி நிறைய பூண்டு பற்களை உரித்து சேர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் 10 காய்ந்த மிளகாய் ஒரு சின்ன நெல்லிக்காய் அளவு புளி (இதற்கு நாட்டு தக்காளி பயன் படுத்தும் போது புளி சேர்க்க தேவையில்லை. பெங்களூர் தக்காளி எடுத்தால் மட்டும் புளி சேர்த்துக் கொள்ளுங்கள்).
இவையெல்லாம் சேர்த்த பிறகு குக்கரை மூடி ஒரே ஒரு விசில் மட்டும் விட்டு அடுத்து அடுப்பை அணைத்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து விடுங்கள். அடுத்ததாக மீண்டும் அடுப்பை பற்ற வைத்து ஒரு பேன் வைத்து அதில் ஒரு டீஸ்பூன் கடுகு, அரை டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து வாசம் வரும் வரை அரைத்து அதை பவுடர் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது தக்காளி தொக்கை தாளித்து விடுவோம். அதற்கு அடுப்பில் பேன் வைத்து சூடானவுடன் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு போட்டு பொரிய விடுங்கள். அதன் பிறகு அடுப்பை மீடியம் பிளேமில் வைத்து விட்டு ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய்த் தூள், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், கால் டீஸ்பூன் உப்பு, கால் ஸ்பூன் பெருங்காயம், ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து அடுப்பை மீடியம் பிளேமில் வைத்துக் வதக்கிய பிறகு அரைத்து வைத்த தக்காளி விழுதை இதில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இவையெல்லாம் சேர்த்து ஒரு முறை கலந்த பிறகு மூடி போட்டு ஐந்து நிமிடம் வரையில் நன்றாக கொதிக்க விடுங்கள். அதன் பிறகு கடுகு வெந்தய பொடி, ஒரு சின்ன துண்டு வெல்லம் சேர்த்து பிறகு மீண்டும் ஒரு முறை கலந்து மூடி வைத்து கொதிக்க விடுங்கள். . ஐந்து நிமிடம் கழித்து எண்ணெய் பிரிந்து வந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு தொக்கை எடுத்து பரிமாறலாம். இதை அப்படியே ஆற வைத்து பாட்டில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் ஒரு மாதம் ஆனால் கூட கெட்டுப் போகாது. வேலைக்கு செல்பவர்கள் இந்த முறையில் தக்காளி தொக்கு செய்து வைத்துக் கொண்டால் மிகவும் சுலபமாக இருக்கும்.