நண்பகல் நேரத்து மயக்கம்

நான் சமீபத்தில்ஓடிடி திரை நெட்பிளிக்ஸ்ல பார்த்த மலையாள திரைப்படம்
நண்பகல் நேரத்து மயக்கம் – இந்த படத்தைப்பற்றிய எனது ‘தெளிவும் மற்றும் அலசலும்
‘நண்பகல் நேரத்து மயக்கம்’. தமிழகத்தின் கருப்பு – வெள்ளை டிவி காலத்து பின்னணியில் ஆனா ஒரு வண்ணமயமான ஒரு கிராமத்தை நம் முன்னே இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசெரி எழுதி இயக்கி தந்திருக்கார் என சொல்வேன்
ஒரு திரைப்படம் உலகின் கவனத்தை ஈர்க்கவேண்டுமானால் அது பிரம்மாண்டமாகவும் அதிக பொருள் செலவிலும்தான் தயாரிக்கப்பட வேண்டும் என்பது எந்த நிர்ணயம் இல்லையே
. நல்ல தமிழ் படங்களை உருவாக்க நினைக்கும் இயக்குநர்கள் கதையை வேறெங்கோ தேடி அலையாமல் தமது கிராமங்களிலேயேகூட சிறந்த கதைகளை தேர்வுசெய்ய முடியும் என்பதற்கு இந்த படம் நல்லதோர் உதாரணம் எனலாம்

. திருக்குறளின் துறவறவியலில் வரும் நிலையாமை அதிகாரத்தின் 339-வது குறளான, ‘உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு’ என்ற குறள்தான் இந்த திரைப்படத்தின் ஒன்லைன் எனலாம்
. இறப்பு உறங்குவதைப் போன்றது, அந்த உறக்கத்தில் இருந்து எழுவதைப் போன்றது பிறப்பு என்ற பொருள்தரும் குறள்
இந்த கான்செப்ட் உண்மைதான் என்பதை இந்த படத்தைப்பார்த்தால் நமக்குப்புரியும்
கேரள மாநிலம் எர்ணாகுளத்தின் மூவட்டுப்புழாவைச் சேர்ந்தவர்கள் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு ஒரு வேனில் சுற்றுலா வந்துவிட்டு திரும்புகின்றனர். இதில் ஜேம்ஸுடன் (மம்மூட்டி) அவரது மனைவி மற்றும் மகனும் இருக்கின்றனர். சொந்த ஊர் திரும்பும் வழியில் ஒரு மதிய உணவுக்குப் பின் வேனில் பயணிப்பவர்கள் அசந்து தூங்க, வேகமெடுத்துச் செல்கிறது
அந்த வேன். ஓரிடத்தில் வேனில் வரும் ஜேம்ஸ் இயற்கை உபாதைக்காக கீழே இறங்கி செல்கிறார்
அந்த ஒரு கிராமத்தை பார்த்தவுடன் வேறு ஒரு நபராக மாறி அந்த கிராமத்தில் ஏற்கெனவே வாழ்ந்த ஒரு தமிழர் கதாபாத்திரத்தை அப்படியே பிரதிபலிக்கிறார்
. காணாமல் போன தமிழரின் ஆவி மம்முட்டி உடலுக்குள் வந்ததா இல்லை மம்முட்டி எதுவும் கதை கேட்டுவிட்டு நடிக்கிறாரா,
நீண்ட நேரமாகியும் அவர் திரும்பல இதனால் பதற்றமடையும் உடன் வந்தவர்கள் அக்கம் பக்கத்தில் சென்று தேடுகின்றனர்.
ஜேம்ஸ் என்ன ஆனார்? எங்கே போனார்? வேனில் வந்தவர்கள் எங்கெங்கு தேடுகிறார்கள்
அவர்கள் ஜேம்ஸை எங்கே எப்படி பார்க்கிறார்கள்? சுந்தரம் யார்? ஜேம்ஸ் எப்படி சுந்தரமாகிறார்?
வேனில் வந்தவர்கள் ஜேம்ஸை மீட்க எவ்வாறு முயல்கின்றனர்? அவை பலனளிக்கிறதா? ஜேம்ஸ் மீண்டு வந்தாரா? இல்லையா? – இதையெல்லாம் அந்த நிகழ்விடத்தில் இருந்து நமக்கு ஒரு மைக்ரோஸ்கோப்பை கொடுத்து நம்மை பார்வையாளர்களாக அலைய விட்டுள்ளார் இயக்குனர்
உண்மையில் என்ன நடந்தது என ரசிகர்களையே யூகிக்கவிட்டு ரசிக்கும்படியான ஒரு திரைப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் லிஜோ ஜோஸ்
‘இவர் . அங்கமாலி டைரிஸ், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் ஏற்கனவே நமது கவனத்தை ஈர்த்தவர்
இந்த திரைப்படத்தில் ஏறத்தாழ ஒரு தமிழ் திரைப்பட இயக்குனர் போலவே தமிழ் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளார்.என சொல்லலாம்
இவரின் முந்தைய சுருளீ படமும் நம்மால் யூகிக்க முடியாத ஒரு படமே
மொத்தமாக 1.45 மணிநேரம் மட்டும் ஓடும் நமக்கு ஒரு அநாயசமாக விருந்து படைத்துள்ளது லிஜோ ஜோஸ் பெல்லிசேரி குழு.

படம் முழுக்க எந்த இடத்திலும் கேமரா அசைவில்லாமல் அப்படியே Standby Mode-ல் தான் இருக்கிறது
. மேடை நாடகத்தில் எப்படி பாத்திரங்கள் வருவதும் போவதுமாக இருக்குமோ அப்படித்தான் நண்பகல் நேரத்து மயக்கத்திலும். Frame மட்டும் சிறிதாகவும் பெரிதாகவும் விரிந்து சுருங்குகின்றன
, லொக்கேஷனும் மாறிக்கொண்டே இருக்கிறது. தேனி ஈஸ்வரின் கேமரா. இந்த அச்சு அசலான கிராமத்தையும் அங்குள்ள வெள்ளந்தி மக்களின் அழகையும் மொத்தமாக அள்ளி கொண்டு வந்திருக்கிறது
உண்மையாக
சொல்லனும்னா இந்தப் படத்தின் ஹீரோ ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் என்றால் அது மிகையாகாது.
இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்ததில் அவரின் பங்கு அலாதியானது. படம் பார்க்கும் ஒவ்வொரு கண்களிலும் கேமராவைப் பொருத்தி கதை சொல்லியிருக்கிறார்
பட ஆரம்பத்தில் வேளாங்கண்ணியின் தங்கும் விடுதிகள், காணிக்கைப் பொருட்கள், மெழுகுதிரிகள், ஜெபமாலைகள்,, மாதா பாடல்கள், புகைப்படங்கள், தெருவோர கடைகளென ஆரோக்கிய மாதாவின் ஆலயத்தைச் சுற்றி வாழும் மனிதர்களின் வாழ்க்கையை குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் தொட்டுப் பார்த்து நம்மை ரசிக்க வைக்கிறது அவரின் கேமரா.இவருக்கு ஒரு அவார்ட் நிச்சயம்
பார்வையாளர்களை கிராமங்களின் அட்ச தீர்க்க ரேகையில் சூழலச் செய்திருக்கிறது ஒளிப்பதிவு. படத்தின் எல்லா ஷாட்களும் ஸ்டெடி ப்ரேமில் தனிக்கதை சொல்லியிருக்கிறது.
குறிப்பாக, வேனில் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கும்போது வேனுக்குள் இருக்கும் மெட்டலில் அனைவரும் தெரிவது போல் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் மிக அருமை.
அதேபோல் மம்மூட்டியின் மனைவி மற்றும் மகன், ரம்யா பாண்டியன் மற்றும் அவரது மகள் இருவேறு வீடுகளில் இருந்தபடி வெவ்வேறு மனநிலையில் மம்மூட்டியின் விழிப்புக்காக காத்திருப்பதை ஒரே ப்ஃரேமில் காட்சிப்படுத்தியிருப்பது இப்படத்தின் மாஸ்டர் பீஸ் இப்படி படம் முழுவதும் தனது தேர்ந்த ஒளிப்பதிவால் பார்வையாளர்களின் கண்கள் முழுவதையும் அபகரித்துக் கொள்கிறார் ஈஸ்வர்
படத்தின்முக்கிய கதாப்பாத்திரத்தில் வரும் மம்மூட்டியின் இயல்பை மீறாத நடிப்பு பார்வையாளர்களை கதைக்களத்துடன் நெருக்கத்தை உண்டு பண்றது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்
அந்த கிராமத்தில் சுந்தரமாக வரும் காட்சிகள், ஊர் மந்தையில் கதைபேசும் காட்சிகள்
, மது அருந்தும்போது நடிகர் திலகம் சிவாஜி போல வசனம் பேசும் காட்சி, தங்களுடன் வரவேண்டும் என வேனில் வந்தவர்கள் அழைக்கும்போது ரகளை செய்யும் காட்சியென மம்மூட்டி தனது நடிப்பால் படம் முழுக்க ரசிக்க வைத்திருக்கிறார்.
மம்மூட்டியின் மனைவியாக வருவது ரம்யா பாண்டியன்
கன கச்சிதம் ,மற்றும் ஊர் பெரியவர் ஜி.எம்.குமார்,இயற்கையான நடிப்பு ,பூ ராமு, நமோ நாராயணன், வேன் டிரைவராக வரும் ராஜேஷ் ஷர்மா என அனைத்து கதாப்பாத்திரங்களும் படத்தை மிக ,இயல்பாக கொண்டு செல்கின்றனர்
பரோட்டா சுடுபவர்.சைக்கிள் ஓட்டுபவர். வண்டிரைவர் ஒட்டலில் மீன் சாப்பிடுவது
மம்முட்டி மனைவிக்கு காலில் தைலம் தேய்ப்பது-ரம்யா பாண்டியனின் பெண்ணின் இயல்பான ஆக்ரோசம்
முதலில் மறுத்து பின் மம்முட்டி மனைவி மகனுக்கு சாப்பாடு கொண்டு போய் கொடுப்பது
மின் வெட்டால் பேன் ஓடாமல் பின் கரண்ட் வந்து லைட் பேன் ஓடும் காட்சி ,இப்படி
குறிப்பாக ரம்யா பாண்டியன் திறமைக்கு இந்தப் படமே போதும் எனக் கூறும் வகையில், ஒடிசலான தோற்றத்தில், கணவனை இழந்த இளம்பெண்ணாக, அத்தனைப் பொருத்தமாக வசனங்கள் அதிகமில்லாமல் நடித்திருக்கிறார்.
படத்தில் வரும் அனைவருமே தங்களது கதாப்பாத்திரங்களுக்கு வலு சேர்த்திருக்கின்றனர்.
மம்மூட்டியின் பார்வை தெரியாத அம்மாவாக வரும் பாட்டி, மம்மூட்டியை மடியில் படுக்கவைத்து தூங்க வைப்பது மிக நேர்த்தி
, நேரெதிரே இருந்தபடி சதா ஓடிக் கொண்டேயிருக்கும் டிவியை கூர்ந்து கவனிப்பதுமாய், மூன்று இடங்களில் கெக்கலித்து சிரித்தும் பார்வையாளர்களின் சிம்மாசனத்தில் அவர் அமர்ந்து கொள்கிறார்.
மம்முட்டியின் மாஸ்டர் கிளாஸ் ஆக்டிங் இதுமாதிரியான கதைக்களத்தில் இப்படியான கேரக்டர்களில் நடிப்பதால் தான், மம்முட்டி மெகா ஸ்டாராக இருக்கிறார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அதுமட்டும் இல்லாமல் அவரே இந்தப் படத்தின் தயாரிப்பாளரும் கூட.! ஜேம்ஸ், சுந்தரம் என இருவிதமான பாத்திரங்களுக்கும் தனது உடல்மொழியில் வித்தியாசம் காட்டி சிலிர்க்க வைத்து நம்மைக்கவர்கிறார்
தமிழ்நாட்டில் உள்ள கிராமத்து வீடுகளின் அமைப்பு, கலைஞர் தொலைக்காட்சி பெட்டியின் முக்கியத்துவம் என சின்ன சின்ன விஷயங்களைக்கூட மிகவும் கவனமாக ஒரு மலையாள இயக்குநர் கையாண்டுள்ளது படத்தின் அழகை கூட்டுகிறது.
மம்முட்டி உட்பட மற்ற கலைஞர்களின் நடிப்பு, எடிட்டிங் என எல்லாமே அருமை. கண் தெரியாத பாட்டி, அவருக்காக 24 மணி நேரமும் ஓடிக்கொண்டே இருக்கும் டிவி, கடைசிக் காட்சியில் வேனின் பின்னால் ஓடும் நாய் என படத்தில் இன்னும் நிறைய இருக்கிறது. சில காட்சிகளை சரியாக புரிந்துகொண்டால் விழுந்து விழுந்து சிரிக்கலாம்.
நிஜ மனிதர்களோடு உயிர்த்திருப்பவை அசல் கிராமங்கள்
நம்ம . நகரத்து கடற்கரைகளில் சூரியன் உதிப்பதாக நம்பப்பட்டாலும், அது குதித்து மகிழ்ந்து விளையாடுவது வெள்ளந்தி மனிதர்கள் வாழும் கிராமத்து வீதிகளில்தானே இதை மறுக்க முடியாதே
எங்கே இருக்கிறது இந்த கிராமம்
இந்தப்படம் என்னோட சிறு வயதில் நான் கழித்த கிராமத்து நிகழ்வுகளை அப்படியே கண்முன் நிறுத்திவிட்டது
சூரியன் உள்ளிட்ட இயற்கையின் பல சக்திகளுடன் இணைந்திருத்தலே கிராமத்து வாழ்க்கையின் மிக பேரழகு
. கிழக்கும் மேற்குமாக கடக்கும் சூரியனை குறுக்கும் நெடுக்குமாக நடந்துப் பார்த்து கணித்து வைத்திருப்பவர்கள் கிராமத்து மனிதர்கள்.
நிலா, சூரியன், வானம், மேகம், மழை, புளியமரம், வேப்பமரம், ஆலமரம் , செடிகொடிகள், இழைதழைகள், வயல் சோளக்காடு, கிணத்துமேடு, ஊர் மந்தை, டூரிங் டாக்கீஸ், ஒத்தையடிப்பாதை, சொசைட்டி ஆபீஸ், ஆடு, மாடு, கோழி, எரு , உரம் , சாணம், வாய்க்கால் வரப்பு, குளத்தங்கரை, ஆத்தங்கரை, அம்மன் கோயில், அய்யனார் சிலை, பால்காரர், தோட்டம், பம்புசெட், போஸ்ட்மரமென இவை அத்தனையோடும் ஒரு இணைப்பு கிராமத்தில் வாழ்பவர்களுக்கு எப்போதும் இருக்கவேச் செய்யும்.
இவைதான் கிராமங்களின் பல கதைகளுக்கு வித்தாகிறது
. முன்னெப்போதாவது ஏதாவதொரு காரணத்துக்காக அந்த கிராமத்தில் உள்ள மரத்திலோ, கிணற்றிலோ அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்திலோ அக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் இறக்க நேர்ந்திருந்தால், அதிலிருந்து இறந்தவர்கள் கிராமத்து மக்களின் நம்பிக்கைக்குரிய அமானுஷ்யங்களாக மாறிவிடுவார்கள் என்பார்கள்
இந்த படத்தைப்பார்க்கும்போது இது உண்மை யென நம்பலாம்
இந்த நம்பிக்கைதான் அந்த மனிதர்களை பல கட்டுப்பாட்டுக்குள் இயங்க வைத்துவிடுகிறது. உச்சிப் பொழுதுகளில் தனியே போகாதே என்றும், வயது வந்த பெண்ணையோ, கருத்தரித்த பெண்ணையோ உடன் அழைத்துச் செல்லும்போது கையில் ஒரு இரும்புத்துண்டையும் கொடுக்கச் செய்கிறது. பகல் பொழுதுகளில் கறி சமைத்து எடுத்துச் சென்றால் அதில் ஒரு கறித்துண்டை போடு
என சொல்வார்கள்
. கருப்பாக இருப்பதாலோ என்னவோ காகங்கள் முன்னோர்களாகவும், இறந்தவர்களாகவும் பார்க்கப்படுகிறது. சில நேரங்களில் வீட்டு கூரையின் மீது அவை அமர்ந்து கரைந்தால், அது உறவினர்களின் வருகை என்பார்கள்
இந்த படத்திலும் ஒரு காக்கை இப்படி வருகிறது
இப்படி இந்தப் பின்னணியில் இத்திரைப்படத்தை அணுகினால் நமக்கு இந்தப்படம் ஒரு புதுமையான அனுபவத்தை கொடுக்கும்
இந்தப்படத்திற்கு தனியாக பிண்ணனி இசை ஏதும் இல்லை
இசையமைப்பாளர் இல்லாமல் பழைய தமிழ் பாடல்களை மட்டுமே பின்னணியில் ஒலிக்கவிட்டு இரண்டு மணி நேர படத்தை அனைவரையும் ஆச்சரியப்படும் வகையில் எடுத்து முடித்துள்ளது
தமிழ் திரைப்படங்களான திருவருட்செல்வர், முள்ளும் மலரும், நிழல்கள் உட்பட10-க்கும் மேற்பட்ட பழைய தமிழ் திரைப்படங்களின் பாடல்களும், ரத்தக் கண்ணீர் உள்ளிட்ட இரண்டு மூன்று பழைய திரைப்படங்களின் வசனங்களும், விளம்பரங்களும் (வாஷிங்பவுடர் நிர்மா) . “இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி” பாடலில் தொடங்கி “வீடுவரை உறவு வீதிவரை மனைவி” பாடலில் முடிகிறது நண்பகல் நேரத்து மயக்கம் படத்தின் பின்னணி இசை.
, அக்காலத்திய தொலைக்காட்சி பக்தி நாடகம் ஒன்றும், அதிகாலை நேர நிகழ்ச்சி ஒன்றும் பின்னணி இசையாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இவைகள் இத்திரைப்படத்தில் ஒரு கதாப்பாத்திரமாகவே பயன்படுத்தியிருப்பது என சொல்லலாம்
.
நண்பகல் நேரத்து மயக்கம் என்ற தலைப்பைப் போன்றே, படம் மொத்தமும் தூக்க கலக்கத்தில் நாம் பார்ப்பது போலதான் உள்ளது. இதுமாதிரியான படங்கள் இப்படி இருப்பதுதான் அழகு
இது எல்லோருக்குமான படம் என்ற நினைப்பில் இருந்து விலகி,நமக்கு பொறுமை இருந்தால் கண்டிப்பாக பார்த்து ரசிக்கலாம்.நாம் பொறுமையாக பார்த்துவிட்டால் அட்டகாசமான அனுபவம் கிடைக்கும். முற்றிலும் அசாத்தியமான கலை படைப்பு என ரசிப்போம்
.

_-ருத்ரா/