பால் கிராண்டின் திடீர் மரணம்

From the Desk of கட்டிங் கண்ணையா!
இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள கிங்ஸ் கிராஸ் நிலையத்திற்கு வெளியே ஹாலிவுட் நடிகர் பால் கிராண்ட் (56) மயக்க நிலையில் விழுந்தார். அவரை மீட்டு போலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் மூளைச்சாவு அடைந்த நிலையில் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். பால் கிராண்டின் திடீர் மரணம் ஹாலிவுட்டில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
‘ஸ்டார் வார்ஸ்: ரிட்டர்ன் ஆஃப் தி ஜெடி’ மற்றும் ‘ஹாரி பாட்டர் அண்ட் தி சோர்சரர்ஸ் ஸ்டோன்’ ஆகிய படங்களில் நடித்த பால் கிராண்ட்டின் மரணத்திற்கான காரணம் தெரியவில்லை என்பதால், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அவரது மகள் சோபி ஜெயின் கிராண்ட் கூறுகையில், ‘என்னுடைய மனம் உடைந்துவிட்டது’ என்றார். 4 அடி 4 இன்ச் உயரமுள்ள பால் கிராண்டுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் ஆகியோர் உள்ளனர்.
From the Desk of கட்டிங் கண்ணையா!