பாட்டுக்கொரு புலவன் மகாகவி பாரதி

இன்று மகாகவி சுப்பிரமணிய பாரதியின் அவர்களின் நினைவு நாள்.
அவர்களைப் பற்றிய இன்றைய பதிவு.
மகாகவி சுப்பிரமணிய பாரதியைப் பற்றி சிலவரிகள்.
மகாகவி சுப்பிரமணிய பாரதிக்கு முன்பு வாழ்ந்த தமிழ் கவிஞர்களுள் பலருக்கு தமிழ் மட்டும் தெரிந்தது. சிலருக்கு வடமொழியும் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் பாரதியோ வடமொழியோடு ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளும் அறிந்தவராக இருந்தார்.பிற மொழி கவிஞர்கள் குறித்தும் அவர்களுடைய இலக்கியப் போக்கு குறித்தும் அவரால் அறிந்து கொள்ள முடிந்தது தமிழுக்கு வாய்த்த தவப்பயன் நம் சுப்பிரமணிய பாரதி.
இந்திய விடுதலைப் போர் வரலாற்றில் பாரத தேவியின் அடிமை விலங்கை அடித்து நொறுக்க உரத்த குரலில் பாடிய முதல் கவிஞர் நம் சுப்பிரமணிய பாரதி.
சுதேசமித்திரன் இதழில் 1904 ல் துணை ஆசிரியர் பொறுப்பேற்ற பாரதி வெறும் ஆங்கில கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்ப்பதில் ஆத்ம நிறைவை அடைய முடியவில்லை. விடுதலை உணர்வை நாட்டு மக்களும் பாட்டின் மூலம் தூண்டுவதற்கு அவர் துணிந்தார்.
” ஒன்று பட்டால் உண்டு வாழ்வே நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே
நொந்தே போயினும் வெந்தே மாயினும் நந்தே சத்தர் உ வந்தே சொல்வது வந்தே மாதரம் தேசமென்று பெயர் சொல்லுவார் மிடிப் பயங்கொல்லுவார் துயர்ப் பகை வெல்லுவார்
என்று தனியும் இந்த சுதந்திர தாகம் என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்
போன்ற பல்வேறு பாடல்கள் நம் இந்திய திருநாட்டின் விடுதலை பெற மகாகவி சுப்பிரமணி பாரதியின் தேசபக்தி பாடல்கள் மக்களை எழுச்சி அடையச் செய்தது.
குழந்தைகளுக்காகவும் பாடல்கள் பாடி இந்தக் குவலயத்தில் பெருமை பெற்றவர் மகாகவி.
” ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கல் ஆகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா ஒரு குழந்தையை வையாதே பாப்பா”
உயிர்களிடத்தில் அன்பு வேணும் – தெய்வம் உண்மையென்று தானறிதல் வேண்டும்
தெய்வம் நமக்குத் துணை பாப்பா ஒரு தீங்கு வர மாட்டாது பாப்பா
என்று சொல்வதன் மூலம் தெய்வத்தின் துணை இருந்தால் தீங்கொன்றும் நேராது என்று அனைவருக்கும் அறிவுறுத்தியவர்
மகாகவி பாரதி.
பாட்டுக்கொரு புலவன் மகாகவி பாரதியை அவரது நினைவு நாளில், எண்ணி எண்ணி பெருமிதம் கொள்வோம்
