கட்டுரைவெளிநாட்டு செய்திகள்
பாஸ்டன் படுகொலை” சம்பவம் நடந்த தினம் இன்று

பாஸ்டன் படுகொலை” சம்பவம் நடந்த தினம் இன்று(1770).
இங்கிலாந்தின் ஆட்சியின் கீழ் அமெரிக்கா இருந்தபோது அமெரிக்கர்கள் மீதும் தேவையில்லாத வரியை விதித்து வந்தது பிரிட்டிஷ் அரசாங்கம்.
அமெரிக்காவிலுள்ள பாஸ்டன் நகர மக்கள் இதை எதிர்த்து போராட்டம் செய்ய ஆரம்பித்தனர். இந்த போராட்டக்காரர்களை ஒடுக்க பிரிட்டிஷ் அரசாங்கம் மார்ச் 5, 1770 ஆம் ஆண்டு பெரும் படையை பாஸ்டனுக்கு அனுப்பியது.
இந்த படையைக் கண்டதும் அமெரிக்க மக்கள் ஆத்திரம் கொண்டு, ஒடுக்க வந்த பிரிட்டிஷ் படையினை தாக்கினர். பிரிட்டிஷ் படையினர் மக்களை நோக்கி சுட ஆரம்பித்தனர். இத்தாக்குதலில் அமெரிக்கர்கள் 10 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தால் உலகெங்கும் வாழ்ந்து வந்த அமெரிக்கர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிராக பேராட்டத்தில் ஈடுபட்டனர்