இலக்கியம்
பிரின்ஸ்

பிரின்ஸ் /
கவிதை/
லதா சரவணன்
நாளைய விடியலின்
முதல் சிந்தனை யாரென்று
பணி முடித்துக் கிளம்பும்முன்
கேட்டது சூரியன்.
ஏன்…கேட்கிறாய் ?
என்றேன் நான்.
பகல் பொழுது முழுக்க
உன்னை ஆக்கிரமித்துக்
கொண்டவனை நினைப்பாயா…
என்று கேள்வி கேட்டது மீண்டும்…
அவனுக்கு உருவம் இல்லை ….
நினைவுகளில் தேங்கி
இருக்கிறான் என்றேன்…
நினைவுகளில் அன்பு
நிலைக்குமா…? என்றது..
இரவு செல்லும் நீ …
அதிகாலை வந்துவிடுவாய்..
என உன் நினைவுகளோடு
நிலா காத்திருக்கிறாளே…
அந்நினைவுகள்தானே
உன்னை உயிர்பிக்கிறது
என்றேன் நான்…
சில விநாடி யோசித்து…
உருவமற்ற அவனை எப்படி சந்திப்பாய்….
கொஞ்சம் சொல்லேன் என்றது….
எப்படி அவனைச் சந்திப்பேன் ……பதில்….நாளை…
பெயராவது சொல்லிவிட்டுப்
போ….கெஞ்சியது…..
பிரின்ஸ் என்றேன் ….மற்றவை
நாளை என்ற புன்னகையில்…
இரவிலும் வெப்பம் கூட்டினான்
சூரியன்..
by
லதா சரவணன்
