தமிழ் என்றும் அமிழ்தே /குறுந்தொகை: புலவர் வேட்ட கண்ணன்.

தமிழ் என்றும் அமிழ்தே -)
குறுந்தொகையின் இப்பாடலை இயற்றியவர்: புலவர் வேட்ட கண்ணன்.
திணை: குறிஞ்சி
கூற்று : தலைமகன் குற்றேவல் மகனால் வரைவுமலிந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. (வரைவு மலிதல் = திருமண முயற்சிகள் நடைபெறுவதை அறிதல்)
கூற்று விளக்கம்: தலைவன் திருமணத்திற்கான முயற்சிகளை மேற்கொண்டதை அவனுடைய குற்றேவல் மகன் வழியாக அறிந்த தோழி, அக்குற்றேவல் மகனை வாழ்த்துவது போல் அச்செய்தியைத் தலைவிக்கு அறிவிக்கிறாள்.
” நெய்கனி குறும்பூழ் காய மாக
ஆர்பதம் பெறுக தோழி யத்தை
பெருங்க னாடன் வரைந்தென வவனெ திர்
நன்றோ மகனே என்றனென்
நன்றே போலும் என்றுரைத்தோனோ “.
( தலைவன் வருவதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டதனை அவனுடைய குற்றேவன் மகனால் அறிந்த தோழி அக்குற்றேவன் மகனை வாழ்த்தும் வாயிலாக அச்செய்தியைத் தலைவிக்கு உணர்த்தியது).
பெரிய மலை நாட்டை உடைய தலைவன் வரைவுக்குரிய முயற்சிகளை மேற்கொண்டானாக, அவனுக்கு முன் குற்றேவன் மகனே, நலமா என்று கேட்டேன், நலமே என்று கூறிய அவன், நெய்மிக ஊறிய குறும்பூழ் சம்பாரத்தோடு கூடிய கறியாக உண்ணுகிற உணவைப் பெறுவானாக!.

திரு முருக. சண்முகம் அவர்கள் புலவர் வேட்ட கண்ணனின் “நெய்கனி குறும்பூழ் காய மாக” என்று தொடங்கும் குறுந்தொகைப் பாடலை வழங்கி அதற்கு விளக்கமும் அளித்துள்ளார்.
அதில் குற்றேவன் மகன் என்ற வார்த்தைகளை உபயோகப்படுத்தியுள்ளார்.
இந்த குறுந்தொகைப் பாடலில் உள்ள எந்த வார்த்தை குற்றேவன் மகன் என்பதைக் குறிக்கிறது என்று தெரிவித்தால் நானும் அதனைத் தெரிந்து கொள்வேன்.
குற்றேவன் மகன் என்றால் யார்?
மேலும் இந்த குறுந்தொகைப் பாடலை பொருள் எளிதில் விளங்குமாறு சந்தி பிரித்து எழுதினால் என் போன்றோருக்கு உதவியாய் இருக்கும்.
பாடலின் எண் என்ன என்பதையும் குறிப்பிட்டு எழுதினால் உபயோகமாய் இருக்கும்
தங்கள் அன்புள்ள
வேலாயுதம்
ok sir