இலக்கியம்
நீ மகாகவி

காலம் படைத்தால்
அவன் கவி
காலத்தைப் படைத்தால்
மகாகவி
நீ மகாகவி
பாரதிக்கு முன்
பாரதிக்குப் பின் என்ற
காலத்தைப் படைத்தாய்
திருவல்லிக்கேணி மயானத்தில்
உன் எலும்பும் தசையும் எரிந்தன
உன் தமிழை எரிப்பதற்கு
எந்த நெருப்புக்கும்
சூடு ‘பத்தாது’
நீ
நெருப்பைச் சுமந்த
கருப்பையில் ஜனித்தவன்
-- வைரமுத்து