இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் ஸ்டுடியோ உரிமையாளர் ஆகிய பன்முக ஆளுமை கொண்ட இயக்குநர் கே.சுப்பிரமணியம்

இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் ஸ்டுடியோ உரிமையாளர் ஆகிய பன்முக ஆளுமை கொண்ட இயக்குநர் கே.சுப்பிரமணியம் பிறந்த நாளின்று
மொத்தம் 14 படங்களில் மட்டுமே நடித்து தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாராக விளங்கியவர் எம்.கே. தியாகராஜ பாகவதர். அவரை நாடக மேடையில் இருந்து தேடிக் கண்டுபிடித்து தனது திரைப்படத்தில் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் கே.சுப்பிரமணியம். புரட்சி இயக்குநர் கே.சுப்பிரமணியத்தின் முதல் படம் ”பவளக்கொடி”
திரையுலகில் பல சாதனைகளை புரிந்த இயக்குனர் கே.சுப்ரமணியம் 1971 ஆம் ஏப்ரல் மாதம் 7ம் நாள் சென்னையில் மரணமடைந்தார். சுப்பிரமணியத்தின் சடலத்தை தாங்கிய பல்லக்கை எம்.ஜி.ஆரும், சிவாஜியும் சுமந்தனர். ஊர்வலம் அடையாறு புற்றுநோய் ஆஸ்பத்திரிக்குப் பின்புறம் உள்ள மயானத்தை அடைந்தது. அங்கே சுப்ரமணியம் உடல் மீது ரோஜா மாலை வைத்து எம்.ஜி.ஆர். அஞ்சலி செலுத்தினார். நடிகர் சந்திரபாபு ஜெபம் செய்தார். அவரது இறுதிச்சடங்குகளை மத்திய அரசின் செய்திப் படப் பிரிவினர் படம் எடுத்தனர். தமிழ்ப் பட உலகில் ஒரு சகாப்தம் முடிந்தது.
1952 ஆம் ஆண்டு “அமெரிக்க சினி டைரக்டர்கள் கில்டு” உலகிலேயே அதிக மதிப்பு வாய்ந்த தகுதி மெடலை இவருக்கு அளித்து பெருமைப்படுத்தியது. தென்னிந்திய ஃபிலிம்சேம்பர் ஆஃப் காமர்ஸ் அமைப்பில் நான்குமுறை தலைவராக பணியாற்றியுள்ளார். பாபநாசம் சிவனை “பக்த குசேலாவில்” நடிகராக அறிமுகப்படுத்தினார்.
அனந்தசயனம் என்ற (1942) படத்தில் சுப்பிரமணியம் கிருஷ்ணன் வேஷத்தில் நடித்தார். 1942 ல் நிருத்யோதயா என்ற நடனப்பள்ளியை ஆரம்பித்தனர். புகழ்பெற்ற நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம் இவரது மகள். மெட்ராஸ் யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ் கார்ப்பரேஷன் 19 நாட்களில் “நவின சதாரம்” என்ற படத்தை தயாரித்து வெளியிட்டார்.
தன் திரைவாழ்க்கையில் கே.சுப்பிரமணியம் தயாரித்த படங்கள் மொத்தம் 22.. இதில் அவர் இயக்கியது 20 படங்கள். 2005- ல் கே.சுப்ரணியத்தை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. திரையுலகில் கே. சுப்ரமணியத்தின் இடத்தை இட்டுநிரப்ப யாராலும் இயலாது
.From The Desk of கட்டிங் கண்ணையா!