வெளிநாட்டு செய்திகள்
பனிப்புயலால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்பு

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பனிப்புயல் காரணமாக ஆயிரத்து முன்னூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் விமான நிலையங்களில், மக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தொடர்ச்சியாக அறிவிப்பு கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த பனிப்புயலால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு பயணிகளும், வெளிநாட்டுப் பயணிகளும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பனிப்புயலை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.