குன்னக்குடி வைத்தியநாதன்

குன்னக்குடி வைத்தியநாதன் (மார்ச் 2, 1935 – செப்டம்பர் 8, 2008) இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு வயலின் கலைஞரும் இசையமைப்பாளரும் ஆவார். குன்னக்குடியில் பிறந்த இவர் இந்திய அரசின் பத்மசிறீ விருது பெற்றவராவார். கருநாடக இசையை வயலினில் வாசித்தோரில் மிக முக்கியமானவராகக் கருதப்படுகிறார்.
நெற்றி முழுவதும் நீண்ட திருநீற்றுப் பட்டையும் பெரிய குங்குமப் பொட்டும் அணிந்து காட்சியளித்தவர். வயலில் உழுதோரையும் வயலின் கேட்கச் செய்தவர் என இவரைப் பற்றிக் குறிப்பிடப்படுகிறது.
1935 இல் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்திலுள்ள குன்றக்குடியில் இராமசாமி சாத்திரி, மீனாட்சி அம்மையார் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்த வைத்தியநாதன் தனது 12 ஆவது அகவையிலிருந்து இசைக் கச்சேரிகளில் பங்கேற்றார்.
ஆரம்பத்தில் செம்மங்குடி சீனிவாச ஐயர், மகாராஜபுரம் சந்தானம், சூலமங்கலம் சகோதரிகள், சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோருடன் இணைந்து பங்கேற்ற குன்னக்குடி பின்னர் தனிக் குழுவை அமைத்து கச்சேரிகள் நடத்தி வந்தார். தனியாகவும் பின்னர் கச்சேரி செய்ய ஆரம்பித்தார்.
அரியக்குடி இராமானுஜ ஐயங்காருக்கு காரைக்குடியில் நடந்த இசை நிகழ்வொன்றில் பக்க வாத்தியமாக வயலின் வாசித்தமையே வைத்தியநாதனின் வயலின் அரங்கேற்றமாகக் கருதப்படுகின்றது. காலங்காலமாக வயலினுடன் மிருதங்கம் வாசிக்கப்பட்டமையில் மாற்றஞ் செய்து வலயப்பட்டி சுப்பிரமணியம் என்பாரின் தவிலுடன் பெருமளவு வயலின் கச்சேரிகளைச் செய்துள்ளார். கருநாடக இசை, திரைப்பட இசை என்பவற்றோடு பறவைகள், மிருகங்களின் ஓசைகள் போன்ற இயற்கை ஒலிகளையும் வயலினில் வாசித்தார்.
நெற்றி முழுவதும் திருநீறு பட்டை, குங்குமப்பொட்டு, கையில் வயலின் அப்படி என்றால் உடனே சிந்தையில் தோன்றும் ஒரே கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன். தற்போது இருக்கும் 2K இளைஞர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. தமிழ் சினிமா மட்டுமல்ல இசையால் கூட தவிர்க்க முடியாத கலைஞர் இந்த குன்னக்குடி வைத்தியநாதன்.
வா ராஜா வா (1969) என்ற திரைப்படத்துக்கு முதன்முதலில் இசையமைத்த வைத்தியநாதனுக்கு திருமலை தென்குமரி (1970) எனும் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருது கிடைத்தது. மொத்தம் 22 திரைப்படங்களுக்கு இசையமைத்தார்.
இசையமைத்த பிற திரைப்படங்கள்
தெய்வம்
தோடிராகம் (1983) என்னும் திரைப்படத்தைச் சொந்தமாகத் தயாரித்தார். டி. என். சேஷகோபாலன் இதில் முக்கிய பாத்திரமாக நடித்தார். குன்னக்குடி வைத்தியநாதன் சில திரைப்படங்களில் கௌரவ வேடங்களில் நடித்தும் உள்ளார்.
அனைத்து பாடல்களையும் தன் கையில் இருக்கும் வயலின் மூலம் வார்த்தைகளால் உச்சரித்து பாடுவது போலவே இசைத்து காட்டும் திறமை கொண்ட ஜாம்பவான் இவர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குன்னக்குடியில் பிறந்தவர் 12 வயது முதல் இருந்தே இசைக்கச்சேரிகளில் பங்கேற்க தொடங்கி விட்டார்.
பாடல்கள் மட்டுமல்லாது மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் ஓசைகளையும் தனது வயலின் மூலம் வாசித்துக் காட்டும் திறமை உள்ளவர். வா ராஜா வா என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
திருவையாறு தியாக பிரம்ம சபையின் செயலாளராக 28 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். மேலும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராக இருந்துள்ளார். இவரது வயலின் திறமைக்காக பல விருதுகளை பெற்றுள்ளார்.
ஆகச்சிறந்த கலைஞர்களை நினைவு கூறுவது என்பது தற்போது இருக்கும் தலைமுறைகளின் முக்கிய கடமையாகும். வயலின் சக்கரவர்த்தி ஆன குன்னக்குடி வைத்தியநாதன் 88வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஒப்பற்ற கலைஞருக்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.