ஆரோக்கியம்

காலையில் எழுந்ததும் டீ குடிப்பதால் என்ன என்ன பாதிப்புகள் ஏற்படும்?

காலையில் எழுந்ததும் டீ குடிப்பதால் என்ன என்ன பாதிப்புகள் ஏற்படும்?

பெரும்பாலான மக்கள் காலை எழுந்ததும் சூடான ஒரு கப் தேநீரை பருகிய பின்னரே அன்றைய நாளை தொடங்குகின்றனர்.  அதிகளவில் டீ குடிக்கும் பழக்கம் பலருக்கும் உண்டு, அதிலும் குறிப்பாக இந்திய மக்களிடம் டீ குடிக்கும் பழக்கம் அதிகம் உள்ளது.  தேநீரில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது, இது உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது.  தேநீர் நன்மையளிக்கும் என்றாலும் தினமும் காலையில் வெறும் வயிற்றில் தேநீர் குடிப்பது நல்லதல்ல.  அதிகளவு தேநீர் குடிப்பது செரிமான மண்டலத்தை பதித்து வயிற்று எரிச்சலை உண்டாக்கலாம்

.பலரும் தலைவலியை போக்க ஒரு கப் சூடான தேநீர் சாப்பிடுகின்றனர்.  வெறும் வயிற்றில் தேநீர் குடிப்பது வாயு பிரச்னையை ஏற்படுத்தும், தேநீர் குடிப்பது அடிக்கடி சிறுநீருக்கு வழிவகுக்கிறது.  இரவு வேளையில் நாம் பல மணிநேரம் தூங்குவதால் உடல் டீஹைட்ரேட் ஆகிறது, காலையில் நீங்கள் எழுந்தவுடன் தேநீர் அருந்தும்போது உடலில் நீரிழப்பு ஏற்படுகிறது.  தேநீரில் உள்ள தியோபிலின் எனும் இரசாயனம் நீரிழப்பை ஏற்படுத்தும்.  தேநீரில் டானின் என்ற ஒரு தனிமம் உள்ளது, இது உணவில் இருந்து இரும்புச் சத்தை உறிஞ்சுவதைத் தடுக்கிறது மற்றும் காஃபின் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை குறைக்கும். தேநீர் அருந்துவது வயிற்றில் அமிலம் மற்றும் காரத்தின் சமநிலையில் பாதிப்பினை ஏற்படுத்துகிறது.  இதனால் ஆசிட் ரிஃப்ளக்ஸ் மூலம் உங்களுக்கு நெஞ்செரிச்சல் ஏற்பட்டு கீழ் மார்பில் வலி ஏற்படும். 

நீங்கள் தேநீரை காலை உணவுடன் அல்லது ஏதேனும் சில சிற்றுண்டிகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.  இல்லையென்றால் தேநீர் அருந்தும் முன் நட்ஸ் சாப்பிடலாம், தேநீரில் சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சேர்க்கலாம்.  வெல்லம் பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்களைக் கொண்டுள்ளது, இது செரிமானத்திற்கும் நல்லது.  தேநீரை விட ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீர் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.  பொதுவாக தேநீர் அருந்துவதற்கான சிறந்த நேரம் பிற்பகல் 3 மணி என்று அறிவுறுத்தப்படுகிறது, இந்த நேரத்தில் குடிப்பது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது, காய்ச்சல் மற்றும் சளி வராமல் தடுக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button