உலகயோகா தினம்

உலக
யோகா தினம்
சக்ராசனம்
செய்முறை:
விரிப்பில் நிமிர்ந்த நிலையில் படுக்கவும். இரண்டு கால்களையும் மடக்க வேண்டும். கால்களுக்கு இடையே, சற்று இடைவெளி இருக்க வேண்டும். கைகளை பின்புறமாக கொண்டு சென்று, கழுத்தின் பக்கவாட்டில் சிறிது இடைவெளி விட்டு, உள்ளங்கை தரையில் படுமாறு வைக்க வேண்டும். உள்ளங்கைகளை அழுத்தியவாறு, மெதுவாக முதுகை உயர்த்தி, பின் தலையை உயர்த்த வேண்டும் (இந்த நிலையில் தலையை கீழே தொங்க விட வேண்டும்.) ஆழ்ந்த சுவாசத்திற்கு பின், மெதுவாக பழைய நிலைக்கு வர வேண்டும்.
உடல் ரீதியான பலன்கள்
உடம்பின் அனைத்து உறுப்புகளும் சீரான இரத்த ஓட்டம் பெறுகின்றன. கண்பார்வை பிரகாசமடைகிறது.
பயன்பெறும் உறுப்புகள்: குதிக்கால்கள், கைகள்
இரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை கவனமாக கையாளவும்.
ஆன்மீக பலன்கள்: மனச்சோர்வு நீங்குகிறது.

சவாசனம் (சாந்தி ஆசனம்)… மனதிற்கு அமைதி அளிப்பதால் சாந்தி ஆசனம் எனவும்,இந்த ஆசனத்தில் அசையாமல் படுத்திருக்கும் நிலை சவத்தை ஒத்திருப்பதால் சாவசனம் எனவும் பெயர் பெற்றது. செய்முறை: விரிப்பில் நன்றாக மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும். கைகளையும் கால்களையும் நன்கு நீட்டிக் கொள்ளவும். கண்களை மூடிக் கொள்ளவும். நீண்ட ஆழ்ந்த மூச்சு விடவும,உடலை இளக்கமாக வைத்துக் கொள்ளவும். கால் விரலிலிருந்து மூட்டு தொடை இடுப்பு வயிறு மார்பு கைகள் முகம் அதே போல் உடல் உள் உறுப்புகளையும் வரிசையாக மனதிற்குள் நினைத்து வரவும் ஒவ்வொரு உள்மற்றும் வெளி உறுப்புகளை நினைக்கும் போதும் அவை நன்றாக ஒய்வு பெறுவதாகவும் தன பணியை சிறப்பாக செய்வதாகவும் மனதிற்குள் சொல்லிக் கொள்ளவும்.உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் நினைத்து சொல்லிக் கொள்ளவும்.உடல் மிக லேசாக ஆவதாகவும் பஞ்சு போல மாறி காற்றில் மிதப்பதாக நினைத்துக் கொள்ளவும். பத்து நிமிடங்கள் களைத்து ஆசனத்தை கலைத்து எழும்போது வலது புறம் திரும்பி முதலில் கைகளை ஊன்றி பின் உடலை எழுப்பி அமரவும். அதன் பின் மெதுவாக எழவும். ஐந்து முதல் பத்து நிமிடம் ஒருமுறை செய்தால் போதுமானது. குறிப்பு:ஆசன பயிற்சியை முடிக்கும் முன் சவாசனம் செய்யாமல் முடிக்க கூடாது.ஆசனங்களை செய்து உடலுறுப்புகள் களைப்பிலிருந்து விடுபட இந்த ஆசனமே முக்கியமானது. பயன்கள்:நாடி நரம்புகள் புத்துணர்வு பெறுகின்றன. மனம் ஒருமைப்படுகிறது. உடல் சுறு சுறுப்படைகிறது. உடல் களைப்பு தீரும். ரத்த ஓட்டம், இதயத்தின் செயல் நாடித்துடிப்புகள் முதலியவை சீராகின்றன. நோயாளிகளும் அதிக களைப்பில் உள்ளவர்களும் இந்த ஆசனத்தை மட்டும் தொடர்ந்து செய்து வந்தால் போதுமானது. நல்ல பலன் கிட்டும்.




