ஏகப்பட்ட விதி மீறல்.. அந்த பக்கமே போக முடியலையே! சென்னையில் பிரபல மாலை சீல்

ஏகப்பட்ட விதி மீறல்.. அந்த பக்கமே போக முடியலையே! சென்னையில் பிரபல மாலை சீல் வைக்க போறாங்களா?
சென்னையில் உள்ள பிரபல மாலான விஆர் மால் விதி மீறல்களில் ஈடுபட்டு உள்ளதாக சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக விஆர் மால் நிர்வாகத்திற்கு சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. VR மால் மற்றும் ஓசோன் ப்ரொஜெக்ட்ஸ் உரிமையாளருக்கு CMDA மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
அங்கே இருக்கும் அதிகாரபூர்வமற்ற, விதிமீறல் செய்யப்பட்ட கட்டிட பகுதிகளை பயன்படுத்த கூடாது, அதை உடனே கைவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
அங்கே இருக்கும் அதிகாரபூர்வமற்ற, விதிமீறல் செய்யப்பட்ட கட்டிட பகுதிகளை பயன்படுத்த கூடாது, அதை உடனே கைவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதேபோல், நான்காவது மாடியில், அனுமதியின்றி இரண்டு நீச்சல் குளங்கள் கட்டப்பட்டுள்ளன. நான்காவது விளையாட்டு தளம் அமைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தில் இடம்பெறாத மொட்டை மாடியில் ஒரு திறந்தவெளி தியேட்டர் உள்ளது. இது எல்லாம் விதி மீறி கட்டப்பட்டு உள்ளது.
மேலும்
வணிக வளாகத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில் பகுதி ஜவஹர்லால் நேரு சாலையுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. அங்கே இவர்கள் அமைத்து உள்ள வாகன சோதனைச் சாவடி காரணமாக, வணிக வளாகத்தின் முன் கடுமையான போக்குவரத்து நெரிசல் உள்ளது. ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தில் காட்டப்பட்டுள்ள மற்ற நுழைவு வாயில்கள் பயன்படுத்தப்படவில்லை. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க வாகனங்கள் எளிதாக செல்ல வழி இருந்தும் கூட அவர்கள் இதை பயன்படுத்தப்படவில்லை. இதனால் அங்கே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கே இருக்கும் அதிகாரபூர்வமற்ற, விதிமீறல் செய்யப்பட்ட கட்டிட பகுதிகளை பயன்படுத்த கூடாது, அதை உடனே கைவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. நோட்டீஸ் அனுப்பப்பட்ட 30 நாட்களுக்குள் அதை கைவிட வேண்டும். இல்லையென்றால் கட்டிடம் மொத்தமாக இடிக்கப்படும், சீல் வைக்கப்படும் என்று அந்த நோட்டீஸில் கூறப்பட்டு உள்ளது.