தனித்தமிழ் சொற்கள் அறிவோம் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ்

சென்னை: தனித்தமிழ் சொற்கள் அறிவோம் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். நாம் ஒவ்வொரு நாளும் பயன்படுத்தும் பிறமொழிகலப்பு சொற்களையும், அவற்றுக்கான தமிழ்ச் சொற்களையும் ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார்.
அவை பின்வருமாறு..
கலப்புச் சொல் – தமிழ்ச் சொல்,
உபயோகம் -பயன்பாடு
சவால் -அறைகூவல்
வியாதி -நோய்
பிரபல -பெயர்பெற்ற; புகழ்பெற்ற
அகங்காரம் -செருக்கு
மனு – விண்ணப்பம்
நகல் – படி
மாமூல் – வழக்கம்
சிபாரிசு – பரிந்துரை
முகாம் – பாசறை
சங்கம் – கழகம்
முடியாட்சி – கோவரசு
சித்தாந்தம் – கோட்பாடு; கருத்தியல்
பஞ்சாங்கம் – ஐந்திரம்
சிங்கம் – அரிமா
சிநேகம் -நட்பு
சத்தியம் -வாய்மை
சர்வம் -எல்லாம்
அபிப்பிராயம் -எண்ணம்; கருத்து
துரிதம் -விரைவு; வேகம்
சாமர்த்தியம் – திறமை
சாந்தி – அமைதி
தருமம் – அறம்
உபவாசம் – நோன்பு; உண்ணாநிலை
சூரியன் – கதிரவன்; ஞாயிறு
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.*