தமிழ்நாட்டிற்கு புதிதாக தலைமைச் செயலாளர்?

🦉
தற்போது தமிழ்நாடு சீஃப் செகரட்டிரியாக இருக்கும் இறையன்பு ஜூன் மாதம் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து தமிழ்நாட்டிற்கு புதிதாக தலைமைச் செயலாளர் பதவியில் ஒருவரை நியமிக்க வேண்டுமானால், கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிலிருந்து ஒருவரைத்தான் முதல்வர் ஸ்டாலின் தேர்வு செய்யோணும் அந்த வகையில் கூடுதல் தலைமைச் செயலாளர் பதவியில் 1986 ஆம் வருட பேஜ் அதிகாரியாக ஹன்ஸ்ராஜ் வர்மாவும், 1987 ஆம் வருட பேஜ் அதிகாரியாக டி.வி.சோமநாதனும் இருக்கிறார்கள். இதில் ஹன்ஸ்ராஜ்வர்மா தற்போது டிக் நிறுவனத்தின் சேர்மனாகவும் நிர்வாக இயக்குநராகவும் இருக்கிறார். சோமநாதன், மத்திய அரசின் நிதித்துறையில் செலவினங்கள் பிரிவின் செயலாளராக இருக்கிறார். அதேபோல், 1988 ஆம் வருட பேஜ் அதிகாரிகளில் இறையன்புவை தவிர்த்து விட்டால், விக்ரம்கபூர், அதுல்யமிஸ்ரா, ஜித்தேந்திரநாத் ஸ்வைன் ஆகிய மூன்று அதிகாரிகள் கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் இருக்கிறார்கள். இவர்களில் ஸ்வைன் மத்திய அரசு பணியிலும், மற்ற இருவரும் மாநில அரசு பணியிலும் இருக்கின்றனர்.
அதேபோல, 1989 ஆம் வருட பேஜ்ஜில் கிருஷ்ணன், ராஜாராமன், எஸ்.கே.பிரபாகர், சந்தீப் சக்சேனா, நசிமுதின், சிவ்தாஸ் மீனா, அனிதாபிரவீன், ஆகிய 7 பேர் கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் இருக்கிறார்கள். இவர்களில் ராஜாராமன், அனிதா ப்ரவீன் ஆகிய இரு அதிகாரிகளும் மத்திய அரசு பணியில் இருக்கிறார்கள். மற்ற 5 பேரும் மாநில அரசு பணியில் இருக்கிறார்கள். அதேபோல, 1990 ஆம் வருட பேஜ்ஜில் விபுநாயர், பனீந்திர ரெட்டி, சாய்க்குமார், ஜவஹர் என 4 பேர் கூடுதல் தலைமைச் செயலாளராக இருக்கின்றனர்.
இதில் பிரதீப் யாதவ் ஐஏஎஸ்ஸும் இணைந்து உள்ளார். இவர் 1992 தமிழ்நாடு பேஜ்ஜை சேர்ந்தவர். பல்வேறு துறைகளில் பணியாற்றிய இவர் அதிமுக ஆட்சியில் கல்வித்துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டார். அப்போதே இவரின் செயல்பாடுகள் பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. அதன்பின் இந்த ஆட்சியில் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளராக நியமிக்கப்பட்டு இவர் பணியாற்றி வருகிறார். தற்போது இவர் கூடுதல் தலைமை செயலாளராக பதவியும் பெற்றுள்ளார். இந்த நிலையில் இவர் கூடுதல் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளதால், அவரும் இந்த ரேஸில் இணைந்துள்ளார்.
1986 முதல் 1992 ஆம் வருட பேஜ் வரையில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 33 பேர் கூடுதல் தலைமைச் செயலாளர்கள் அந்தஸ்தில் இருக்கிறார்கள். இவர்களில் ஒருவரை தலைமைச் செயலாளராக தேர்வு செய்யும் அதிகாரம் முதலமைச்சருக்கு இருக்கிறது. ஆனால், பொதுவாக சீனியாரிட்டி அடிப்படையில் முதல் பேஜ்ஜில் எத்தனை அதிகாரிகள் இருக்கிறார்களோ அவர்களில் முதல்வரின் நம்பிக்கைக்கும் ஆட்சியை திறம்பட நடத்திச் செல்லும் ஆற்றலும் மிக்க ஒருவர் தான் தேர்வு செய்யப்படுவர். ஆனால், முதல் பேஜ்ஜில் 5 நபர்களுக்கு குறைவாக இருந்தால் அடுத்த வருட பேஜ்ஜில் முதலிடத்தில் இருக்கும் அதிகாரிகளையும் இணைத்து மொத்தமுள்ள 6 அதிகாரிகள் கொண்ட பட்டியலை தயாரிச்சு அதில் ஒருவரை முதல்வர் செலகட் செய்வார் என்று கூறப்படுது.
From The Desk of கட்டிங் கண்ணையா!