ஆடுதே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்.

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் . நேற்று அங்கே மழை காரணமாக தண்ணீர் தேங்கியது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
சென்னையில் 16.8.2023 இரவு கனமழை பெய்தது. இரவு முழுக்க விடாமல் கனமழை பெய்தது. இந்த கனமழை காரணமாக மறுநாள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பகுதியில் தண்ணீர் தேங்கியது.
இங்கே தண்ணீர் பேருந்து நிலையத்தின் நுழைவு வாயிலிலும், உட்பகுதியில் தேங்கியது. தண்ணீர் இரவு தேங்கி மறுநாள் பிற்பகல் வரை தேங்கியே இருந்தது. இங்கே முதல் கட்டமாக தண்ணீர் வெளியேற்றும் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டது.
ஆனாலும் நேற்று மழையில் இங்கே தண்ணீர் தேங்கியது.
இந்த பேருந்து நிலையம் இன்னும் 2 மாதங்களில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் இங்கே தண்ணீர் தேங்கி உள்ளது. என்ன நடந்தது?: இதனால் இங்கே மேலும் மழை நீர் வெளியேற்றும் அமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டிய நிலை உள்ளது.
பாக்கம் என்று முடியும் பகுதிகள் எல்லாமே ஒரு காலத்தில் தண்ணீர் நிரம்பிய நீர் ஆதாரம் கொண்ட ஏரிகள், குளங்களை கொண்ட பகுதிகள்தான். இந்த பேருந்து நிலையத்திற்கு அருகே செய்யப்பட்ட சில ஆக்கிரமிப்புகள் இங்கே தண்ணீர் தேங்கவும் காரணமாக உள்ளது. அதை விட இந்த பேருந்து நிலையம் சுத்தமாக எந்த திட்டமிடலும் இல்லாமல் கட்டப்பட்டு உள்ளது. பேருந்து நிலையத்தின் மையப்பகுதி தண்ணீர் தேங்கும் வகையில் தாழ்வாக கட்டப்பட்டு உள்ளது. இந்த பகுதியே தாழ்வான இடத்தில் உள்ளது. இதனால் தண்ணீர் எளிதாக சென்று தேங்கிவிடுகிறது. பிளானிங் செய்யப்பட்ட சொதப்பல்தான் தண்ணீர் தேங்குவதற்கு முக்கிய காரணம் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.
ஆய்வு: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் . நேற்று அங்கே மழை காரணமாக தண்ணீர் தேங்கியது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜான் லூயிஸ் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
மழைநீர் தேங்குவதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கே எதனால் தண்ணீர் தேங்குகிறது. இங்கே தண்ணீரே தேங்காமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று ஆய்வு செய்து வருகின்றனர். “கிளாம்பாக்கம் ஏரிகளில் தண்ணீரை திருப்பிவிட வழி ஏற்படுத்தும் விதமாக இங்கே வழிகளை உருவாக்க அரசு முயன்று வருகிறது.
கட்டுமானம் திறப்பு
: கட்டுமானப் பணிகள் முடிவடையாததால் இதன் திறப்பு விழா தள்ளிக்கொண்டே போகிறது. இந்த வருடம் இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. ஜெயலலிதா மூலம் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த பேருந்து நிலையம் முறையாக திட்டமிட்டு கட்டப்படவில்லை. சென்னையில் இருந்து 30 கிமீ தூரத்தில் பேருந்து நிலையம் இருக்கிறது. இங்கே மெட்ரோ இல்லை. புறநகர் ரயில் இல்லை. இதனால் மக்கள் இங்கிருந்து சென்னைக்கு உள்ளே வருவது கடினமான வேலையாக இருக்கிறது. இங்கே பேருந்து நிலையம் அமைக்க திட்டமிட்ட போதே அதை முறையாக திட்டமிடாமல் விட்டுவிட்டனர். அதன் காரணமாகவே தற்போது இங்கே மாற்றங்களை செய்து வருகின்றனர்
. இங்கே கடந்த ஆட்சியில் செய்யப்பட்ட தவறுகளை சரி செய்து மக்கள் பயன்படுத்தும் வகையில் எளிமையான விஷயங்களை மாற்றி வருவதாக ஆளும் திமுக அரசும் தெரிவித்து உள்ளது. உள்ளே இரண்டு மாடி.. மக்கள் செல்ல நவீன நகரும் தரைத்தளம், அதுபோக எக்ஸ்லேட்டர் என்று பல சேவைகளை வழங்க முடிவு செய்துள்ளனர்.