மற்றவை

எனக்கு பிடித்த நடிகர் சிவாஜி தான். சிவாஜிதான் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

செய்தியாளர்: கடுமையான அரசியல் பணிகளுக்கு இடையில் ஆசுவாசப்படுத்திக் கொள்ள என்ன செய்வீர்கள்?

கழகத் தலைவர்: நான் காலையில் ஐந்தரை மணிக்கெல்லாம் எழுந்து விடுவேன். எழுந்த உடன் லைட்டா ஒரு டீ சாப்பிடுவேன். அதற்கடுத்து வாக்கிங் செல்வேன். ஒருமணி நேரம் வாக்கிங் செல்வேன். ஐ.ஐ.டி.க்கு செல்வேன், தியோசபிகல் சொசைட்டி செல்வேன். இந்த கொரானா வந்த பிறகு வாக்கிங் போக முடியவில்லை. வீட்டிலேயே மொட்டை மாடியிலேயே வாக்கிங் போவேன்.

அதற்கு பிறகு யோகா ஒரு மணி நேரம் செய்வேன். மூச்சுப் பயிற்சி இவையெல்லாம் செய்வேன். இவையெல்லாம் எட்டரை வரை செய்துவிட்டு 9 மணியளவில் நியூஸ் பேப்பர் படித்து விட்டு, விசிஸ்டர்களை சந்தித்துவிட்டு அதற்குப் பிறகு பத்தரை மணிக்கு அறிவாலயம் போய் விடுவேன். அல்லது ‘முரசொலி’க்கு போய்விட்டு அறிவாலயத்திற்கு வந்து விடுவேன். இடையில் ஏதாவது நிகழ்ச்சிகள் இருந்தால் இவைகளையெல்லாம் தவிர்த்துவிட்டு நேராக அறிவாலயம் வருவேன். இது நடைமுறையில் உள்ளது.

செய்தியாளர்: அரசியலைத் தவிர நீங்கள் விருப்பத்தோடு பின்பற்றுகிற ஏதாவது ஒரு துறை இருக்கிறதா?

கழகத் தலைவர்: அரசியலைத் தவிர வேறு எதையும் பின்பற்றுவதில்லை. முன்பு சினிமாவுக்கு போய்க்கொண்டிருந்தேன். இப்போது இல்லை.

செய்தியாளர்: கடைசியில் பார்த்த படம்.

கழகத் தலைவர்: எந்திரன் படம். அதுவும் பிரிவியூ தியேட்டரில் பார்த்தேன். கலாநிதி மாறன் அழைத்துக் கொண்டு போனார்.

செய்தியாளர்: உங்களுக்கு பிடித்த நடிகர்?

கழகத் தலைவர்: எனக்கு பிடித்த நடிகர் சிவாஜி தான். சிவாஜிதான் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

செய்தியாளர்: அதை அவரிடம் சொல்லியிருக்கிறீர்களா?

கழகத் தலைவர்: நிறையச் சொல்லியிருக்கிறேன். நான் தலைமுடியை வளர்த்திருப்பேன். அவர் வந்தால் முதலில் என் தலைமுடியைத்தான் பிடிப்பார். அவர்தான் எங்கள் வீட்டு சமையல்கட்டு வரை வந்து பேசக்கூடியவர். வீட்டில் எல்லாருடைய பேரையும் சொல்லி கூப்பிடுவார். தலைவரிடம் அவ்வளவு நெருக்கம்.

செய்தியாளர்: கிரிக்கெட் பார்ப்பீர்களா நீங்கள்?

கழகத் தலைவர்: கிரிக்கெட் என்றால் எனக்கு ரொம்ப இஷ்டம். கிரிக்கெட் நான் நிறைய விளையாடி இருக்கிறேன். ஸ்கூல்லேயும் விளையாடி இருக்கிறேன். விவேகானந்தா காலேஜில் படிக்கும் போது விளையாடி இருக்கிறேன். அதற்குப் பிறகு நடிகர்கள் எல்லாம் கார்கில் நிதி வசூல் செய்தார்கள். அப்போது நான் மேயராக இருந்தபோது கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன்.

செய்தியாளர்: கிரிக்கெட்டை இப்போது ரெகுலராக பார்க்கிறீர்களா? பிடித்த பிளேயர் யார்?

கழகத் தலைவர்: டெண்டுல்கரை எனக்கு ரொம்ப பிடிக்கும்.

செய்தியாளர்: மியூசிக்கெல்லாம் கேட்பீர்களா?

கழகத் தலைவர்: கர்நாடிக் மியூசிக் கேட்பேன். பழைய பாடல்கள் பிடிக்கும். இரவில் தூங்கும்போது கேட்டுக்கொண்டு தூங்குவேன்.

செய்தியாளர்: கர்நாடக இசையில் யாரைப் பிடிக்கும்?

கழகத் தலைவர்: எம்.எஸ்.சுப்புலட்சுமியை பிடிக்கும்.

செய்தியாளர்: நீங்கள் அடிக்கடி கேட்கிற பாடல், அல்லது உங்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கிற பாடல்?

கழகத் தலைவர்: எனக்கு பழையப் பாடல்கள்தான் பிடிக்கும். ரொம்ப விரும்பி கேட்பேன். இப்போது வருகிற பாடல்கள் புரிவதே இல்லை. அதை கேட்பதற்கு இனிமையே இருப்பதில்லை. இப்போது இருக்கிற இளைஞர்களுக்கு தகுந்த மாதிரி போடுகிறார்களே தவிர, மனதில் நிற்கிற அளவுக்கு இல்லை. பழைய பாடல்கள் இப்போது கேட்டாலும் மனதில் நிற்கிற மாதிரி இருக்கும்.

செய்தியாளர்: இன்னும் ஒரு பாடல் எங்களுக்காக பாடுங்களேன்?

கழகத் தலைவர்: தலைவருடைய கதை வசனத்தில் ‘இருவர் உள்ளம்’ திரைப்படத்தில் சிவாஜி ஒரு பாட்டுப் பாடுவார். பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம், அந்தப் பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும். அந்த படத்தை ஏழு முறை பார்த்து இருக்கிறேன். அதனால் மனதிலேயே நின்றிருக்கிறது.

(கழகத் தலைவர் பாடுகிறார்) பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம், பாடல்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்… வானமெங்கும் ஓடி வாழ்க்கை இன்பம் தேடி நாம் இருவர் ஆடலாம் ஞானப்பாட்டு பாடி பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம் கொடிகள் எல்லாம் பலவிதம், கொடிக்குக் கொடி பலவிதம். கொண்டாட்டம் பலவிதம், நான் அதுலே ஒருவிதம்.” எனத் தெரிவித்துள்ளார்.

கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி

நன்றி: கலைஞர் செய்திகள்

See translation

May be an image of 2 people

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button