tourist

கோடை 2023: சென்னை to அரக்கு பள்ளத்தாக்கு – பயணம், சுற்றிப் பார்க்கும் இடங்கள்,

கோடை 2023: சென்னை to அரக்கு பள்ளத்தாக்கு – பயணம், சுற்றிப் பார்க்கும் இடங்கள்,

இந்த கட்டுரையில் சென்னைக்கு மிக அருகில் இருக்கும் அழகிய மலைவாசஸ்தலமான ஆந்திராவின் அரக்கு பள்ளத்தாக்கிற்கு குறைவான பட்ஜெட்டில் சுற்றுலா செல்லுவது எப்படி என்று பார்ப்போம். சரியாக திட்டமிட்டால் இந்த கோடையை அரக்கு பள்ளத்தாக்கிற்கு அசத்தலாக அனுபவிக்கலாம். சென்னையிலிருந்து அரக்கு பள்ளத்தாக்கிற்கு பஸ் மற்றும் ரயில் பயணம், அரக்க்கு பள்ளதாக்கில் உள்ள தங்குமிடங்கள், எந்தெந்த இடங்களைச் சுற்றி பார்ப்பது குறித்து இங்கே காண்போம்!

சென்னை to அரக்கு பேருந்து பயணம் சென்னையிலிருந்து அரக்கு பள்ளத்தாக்கிற்கு நேரடியாக பேருந்துகள் இயப்படவில்லை. அரக்குவிற்கு 110 கிமீ தொலைவில் பெரிய நகரமான விசாகப்பட்டினம் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து விசாகப்பட்டினத்திற்கு தினசரி பேருந்துகள் இயக்கப்படுக்கின்றன. சென்னையிலிருந்து 800 கிமீ தொலைவில் அமைந்துள்ள விசாகப்பட்டினத்தை அடைய 16 மணி நேரம் ஆகிறது. ஒரு டிக்கெட்டின் விலை ரூ.1000 இல் இருந்து ரூ.2500 வரை செல்கிறது.

சென்னை to அரக்கு ரயில் பயணம் விசாகப்பட்டினம் ரயில் நிலையமும் விஜயநகரம் ரயில் நிலையமும் அரக்கு பள்ளத்தாக்கிற்கு அருகில் அமைந்துள்ள ரயில் நிலையமாகும். சென்னையிலிருந்து விசாகப்பட்டினத்திற்கு தினசரி ரயில்கள் இயங்குகிறது, சென்னை சென்ட்ரலில் தினமும் இரவு 7 மணிக்கு இருந்து கோரமண்டல் எக்ஸ்பிரஸ் புறப்படுகிறது. இதற்கான டிக்கெட் விலை ரூ.400 ஆகும். அதே போல, சென்னை சென்ட்ரலில் தினமும் இரவு 7.15 மணிக்கு இருந்து ஹவுரா எக்ஸ்பிரஸ் புறப்படுகிறது, இதற்கான டிக்கெட் விலை ரூ.465 ஆகும். இந்த ரயில் விஜயநகரம் ரயில் நிலையத்தில் நிற்கும். நீங்கள் இந்த இரண்டு ரயில் நிலையங்களில் ஏதோ ஒன்றில் இறங்கி, வாடகை டாக்ஸி அல்லது பேருந்து மூலம் அரக்கு பள்ளத்தாக்கை அடையலாம்.

சென்னை to அரக்கு விமானப் பயணம் சென்னையிலிருந்து விசாகப்பட்டினத்திற்கு தினசரி விமானங்கள் இயக்கப்படுகின்றன. விமான டிக்கெட் மிகவும் மலிவாக ரூ.2600 இல் இருந்து ஆரம்பிக்கிறது. ஆனால் நீங்கள் முந்திக் கொள்வது அவசியம். விமான நிலையத்திலிருந்து வாடகை டாக்ஸி மூலம் உங்கள் இலக்கை அடையலாம். செல்கின்ற வழி முழுக்கவும் பசுமையான பள்ளத்தாக்குகள், இனிமையான வானிலை, ஹேர்பின் வளைவுகள் என எல்லாமே போட்டோ ஸ்பாட்டுகள் தான்.

அரக்கு பள்ளத்தாக்கில் உள்ள மலிவான ஹோட்டல்கள் அரக்கு பள்ளத்தாக்கு ஆந்திராவில் இருக்கும் ஒரே மலைவாசஸ்தலம் என்பதால் நிறைய பட்ஜெட் பிரண்ட்லி ஹோட்டல்கள் உள்ளன. B sqaure valley, Hill park resorts, Ushodaya resorts, Mountain view resorts, Haritha hill resort போன்ற இடங்களில் தங்கிக் கொள்ளலாம். அதே போல அரக்கு பள்ளதாக்கில் அழகிய ஹோம்ஸ்டேகளும் கேம்ப்சைட்களும் உள்ளன. மேலும் நீங்கள் கம்மி பட்ஜெட்டின் குடகில் ரூம் புக்கிங் செய்ய ஹோட்டல் புக்கிங் இணையத்தளங்களை (Hotel booking service providers) கூட பார்வையிடலாம்.

அரக்கு பள்ளத்தாக்கின் அழகிய சுற்றுலாத் தலங்கள் தனித்துவத்தையும் அமைதியையும் இயற்கை அழகையும் தேடும் சுற்றுலாப்பயணியாக நீங்கள் இருந்தால், அரக்கு தான் சரியான சாய்ஸ். அரக்கு பள்ளத்தாக்கில் நீங்கள் பார்வையிட வேண்டிய இடங்கள் இதோ! 1. போரா குகைகள் – 1807 ஆம் ஆண்டில் இந்தியாவின் புவியியல் ஆய்வின் வில்லியம் கிங் ஜார்ஜ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த அழகிய குகைகள் ஒரு மில்லியன் ஆண்டுகள் பழமையான சுண்ணாம்புக் குகைகளாகும். 2. கடிகி நீர்வீழ்ச்சி – போரா குகைகளுக்கு அருகில் உள்ள கடிகி கிராமத்தில் அமைந்துள்ள இந்த அழகிய நீர்வீழ்ச்சி, ட்ரெக்கிங் செய்ய ஏற்ற ஸ்பாட் ஆகும். 3. காபி மியூசியம் – அரக்கு பள்ளத்தாக்கில் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று காபி மியூசியம். 1930 ஆம் ஆண்டில், பிரகாஷ் ராவ் என்ற புலம்பெயர்ந்தவர், அரேபிகா காபியின் தனித்துவத்தை எடுத்துரைப்பதற்காக சுற்றுலாப் பயணிகளுக்காக இதனை ஆரம்பித்தார். 4. சப்பாறை நீர்வீழ்ச்சி – அரக்குவில் இருந்து வெறும் 13 கி.மீ தொலைவில் உள்ள சப்பாறை நீர்வீழ்ச்சி அல்லது டம்ப்ரிகுடா நீர்வீழ்ச்சி மிகவும் பிரபலமான வார இறுதி சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். 5. கலிகொண்டா வியூ பாயின்ட் – பசுமையான பள்ளத்தாக்குகள், ஆறுகள் மற்றும் நீரோடைகள், ரயில் பாதைகள், குன்றுகள் மற்றும் கட்டிடங்கள் ஆகியவற்றின் பரந்த பார்வையைப் பெற இங்கே நீங்கள் வர வேண்டும். 6. பழங்குடியினர் அருங்காட்சியகம் – மற்ற அருங்காட்சியகங்களைப் போலல்லாமல், இந்த பழங்குடி அருங்காட்சியகம் பழங்குடியினரின் கலைப்பொருட்களைக் காட்சிப்படுத்துகிறது. 7. பத்மாபுரம் தோட்டம் – 26 ஏக்கர் நர்சரியில் பழத்தோட்டங்கள், வண்ணமயமான பூக்கள், அற்புதமான ரோஜா தோட்டம், கவர்ச்சியான தாவரங்கள், யூகலிப்டஸ், பைன் ஆகியவற்றை நீங்கள் இங்கே கண்டு களிக்கலாம். 8. அனந்தகிரி நீர்வீழ்ச்சி – தடிமடா நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கப்படும் அனந்தகிரி நீர்வீழ்ச்சி சுற்றிலும் இயற்கை அழகு நிரம்பிய சூழலால் உங்கள் மனதை கொள்ளையடிக்கும். 9. மத்ஸ்யகுண்டம் – மீன் குளம் என்று பிரபலமாக அறியப்படும், படேருவுக்கு அருகில் உள்ள மத்ஸ்யகுண்டம் பல்வேறு வகையான வண்ண மீன்களைக் கொண்டுள்ளது. 10. காபி தோட்டங்கள் – அரக்கு பள்ளத்தாக்கில் அமைந்துள்ள அழகிய காபி தோட்டங்களுக்கு சென்று சுற்றிப் பார்க்க தவறாதீர்கள். பயணத்திற்கு ஆகும் செலவுகள் அரக்கு பள்ளத்தாக்கின் சுற்றுலாத் தலங்களைச் சுற்றிப் பார்ப்பதற்கு 2 இல் இருந்து 3 நாட்கள் தாராளமாக எடுக்கும். கோடை விடுமுறை தொடங்குவதற்கு இன்னும் அதிக நேரம் இல்லை, ஆதலால் சீக்கிரமே யோசித்து பஸ் அல்லது ரயில் டிக்கெட், ரூம் புக்கிங், ட்ராவல் கைடு ஆகியவற்றை புக் செய்து கொள்ளலாம். எடுத்துகாட்டாக நீங்கள் உங்கள் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் சுற்றுலா பிளான் பண்ணுகிறீர்கள் என்றால், கம்மி பட்ஜெட்டில் இந்த சுற்றுலாவை முடிக்க ரூ.10,000 முதல் ரூ.13,000 வரை செலவாகும். இந்த பட்ஜெட் ரயில் அல்லது பேருந்தில் பயணம் செய்தால் மட்டுமே, நீங்கள் விமானத்தில் சென்றால் கூடுதலாக ஒரு நபருக்கு ரூ.7000 அதிகரிக்கும். என்ன பயணிகளே, இந்த கோடையை அரக்கு பள்ளத்தாக்கில் என்ஜாய் பண்ணலாமா? சென்னைக்கு மிக அருகில் உள்ள மலைவாசஸ்தலம் என்பதால் இந்த ட்ரிப்பை பட்ஜெட்டில் முடித்துக் கொள்வதும் ஈசி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button