tourist

மே மாதம் கொடைக்கானலில் வெறும் 150 ரூபாய் கொடுத்தால் அரசு பேருந்தில் 12 சுற்றுலா தலங்களை சுற்றி பார்க்கும் அசத்தல்திட்டம்.

மே மாதம் கொடைக்கானலில் வெறும் 150 ரூபாய் கொடுத்தால் அரசு பேருந்தில் 12 சுற்றுலா தலங்களை சுற்றி பார்க்கும் அசத்தல் திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை

அப்புறம் என்ன ஜம்முன்னு கிளம்புங்க… ஆனா இதை பத்தி தெரிஞ்சுக்க வேணாமா? சொல்லிட்டா போச்சு.

ஆயிரக்கணக்குல செலவு செய்து வேனோ ஜீப்போ வைக்கத் தேவையில்லை. திண்டுக்கல், பழனி, மதுரை, திருச்சி, வத்தலகுண்டுவிலிருந்து கொடைக்கானலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பேருந்தில்தான் இந்த ஆஃபர் இருக்கிறது. இந்த பேருந்துகள் முன் பதிவின் பேரில் இயக்கப்படுகின்றன.

  1. Upper lake View
  2. Moyar Point
  3. Pine Forest
  4. குணா குகை
  5. தூண் பாறை
  6. பசுமைப் பள்ளத்தாக்கு
  7. கால்ஃப் மைதானம்
  8. பாம்பார் ஆறு View
  9. 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம்
  10. கோக்கர்ஸ் வாக்
  11. Briyant Park
  12. லேக் (டிராப்)- Lake (Drop)

ஆகிய இந்த 12 சுற்றுலா தலங்களுக்கு மேற்கண்ட பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த இடங்களை காண நபர் ஒருவருக்கு 150 ரூபாய் பேருந்து கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 12 வயதுக்குள்பட்ட குழந்தைகளாக இருந்தால் அவர்களுக்கு ரூ 75 வசூலிக்கப்படும்.
அந்த பேருந்துகளில் இயற்கை எழில் காட்சி Natural Scene என குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த 12 இடங்களுக்கும் அந்த பேருந்துகளின் நடத்துநரே அழைத்துக் கொண்டு காட்டுகிறார்கள். சுற்றுலா பயணிகளுக்காக நீண்ட நேரம் ஒதுக்குவதால் பயணிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்கள்.
இந்த ஆஃபர் ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரு மாதங்கள் இருக்கும்.
இந்த பேருந்துகள் போதுமானதாக இல்லைன்னு மக்கள் குறைபடுவதும் தெரிகிறது. கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை எழுந்துள்ளது.
அப்புறம் என்ன கிளம்புங்க ஜாலியா வெறும் 150 ரூபாய்ல கொடைக்கானலை சுத்திட்டு வரலாம்🖤❤️🏴🚩🙏🙏🙏💐💐💐

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button