tourist

கோடை விடுமுறைக்கு சென்னையிலிருந்து வார இறுதியில் செல்லக்கூடிய 5 மலை பிரதேசங்கள்

கோடை விடுமுறைக்கு சென்னையிலிருந்து வார இறுதியில் செல்லக்கூடிய 5 மலை பிரதேசங்கள்

கோடை விடுமுறை வேறு தொடங்க இருக்கிறது.. குழந்தைகளோடு குடும்பமாக எந்த மலைப்பகுதிக்கு போகலாம் என்று சிந்துத்துக்கொண்டு இருப்பீர்கள். யில் இருந்து வார இறுதி நாட்களில் செல்லக்கூடிய மலை பிரதேசங்களை தான் இதில் உங்களுக்கு சொல்ல இருக்கிறோம். ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் செல்லும் ட்ரிப்களுக்கு இந்த மலை பிரதேசங்கள் சரியாக பொருந்தும் முயற்சி செய்து பாருங்க

1.சென்னையில் இருந்து 100 கிமீ தொலைவில் உள்ள மிகவும் பிரபலமான மலையேற்ற தலங்கள் மற்றும் மலைவாசஸ்தலங்களில் ஒன்று நாகலாபுரம். அதன் இனிமையான வானிலை காரணமாக அதிகப்படியான மக்கள் இந்த இடத்திற்கு வந்து செல்கின்றனர். 2 மணி நேர சாகச மலையேற்ற அனுபவத்துடன், ட்ரெக்கிங் இறுதியில் ரம்யமான நாகலாபுரம் நீர்வீழ்ச்சி உங்களை வெயிலுக்கு இதமாக குளிர்விக்கும். தேசிய நெடுஞ்சாலை 16 மற்றும் திருப்பதி சாலை வழியாக இந்த இடத்தை அடையலாம்.

2.சென்னையில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி மழையும் கோடையில் குளிர்ச்சியை தேடும் நபர்களுக்கு ஏற்றது. பசுமையான பள்ளத்தாக்குகள், உயரமான மலைகள் மற்றும் ரோஜா தோட்டங்கள் என்று குடும்பத்தோடு பயணிப்பவர்களுக்கு ஏற்றது. நீங்கள் ஒரு அட்ரினலின் ரஷ் தேடுபவர் என்றால், அந்த இடம் உங்களுக்காக பாராகிளைடிங் வசதியையும் வைத்துள்ளது.

3.சென்னையிலிருந்து 343 கி.மீ. தொலைவில் சேலத்தில் உள்ள கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஷெவராய்ஸ் மலைத்தொடர், ஏற்காடு என்று அழைக்கப்படும் இது இயற்கை அழகின் களஞ்சியமாக உள்ளது. காடுகளில் அடர்ந்த முட்புதர்களுக்கு மத்தியில் காட்டெருமைகள், முங்கூஸ்,பல்புல்ஸ், பார்ட்ரிட்ஜ்கள், சிட்டுக்குருவிகள் போன்ற ஏராளமான பறவைகள், வனவிலங்குகளுடன் வனவிலங்கு ஆர்வலர்களுக்கு சொர்க்கமாக இருக்கும். பிரமிக்க வைக்கும் ஏற்காடு ஏரி அதன் ஸ்வான் வடிவ படகுகளுடன் பயணிகளை ஈர்த்து வருகிறது.

4.சென்னையில் இருந்து 280 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஹார்ஸ்லி மலைகள் கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாகும். டபிள்யூ.டி. ஹார்ஸ்லி என்ற ஆங்கிலேயர் இந்த இடத்தின் அழகிய அழகில் மயங்கி, இந்த மலைப்பகுதியில் தனது வீட்டைக் கட்ட முடிவு செய்தார். அதனால் இந்த மலைக்கு அவரது பெயரே சூட்டப்பட்டது. கங்கோத்ரி ஏரி, கலி பண்டா, சுற்றுச்சூழல் பூங்கா மற்றும் ஹார்ஸ்லி ஹில்ஸ் அருங்காட்சியகம் ஆகியவை இங்கு பார்க்கக்கூடிய இடங்களாகும். இங்கு சோர்பிங் (zorbing)என்ற சாகச நடவடிக்கையிலும் ஈடுபடலாம்.

5.சென்னையில் இருந்து 378 கிலோமீட்டர் தொலைவில் நாமக்கல்லில் அமைந்துள்ள கொல்லிமலை ஒரு ஆய்வு செய்யப்படாத பகுதி. மருத்துவம் செய்யும் முனிவர்கள் தங்கியிருந்த சித்தர் குகைகள் நிரம்பிய இடமாக சொல்லப்படுகிறது. ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் நீங்கள் மலையேற்றம் செய்யலாம். அதோடு அன்னாசி ஆராய்ச்சி பண்ணை, தாவரவியல் பூங்கா, மாசிலா நீர்வீழ்ச்சி மற்றும் செல்லூர் வியூ பாயிண்ட் ஆகியவற்றைப் பார்வையிடவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button