Uncategorized

கர்ரெட் மார்கன் பர்த் டே

கர்ரெட் மார்கன் பர்த் டே 💐

பல கருவிகளை கண்டறிந்த அமெரிக்க கண்டுபிடிப்பாளர் கர்ரெட் அகஸ்டஸ் மார்கன் 1877ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் தேதி அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் பிறந்தார்.. இந்த மார்கன், சிறுவயதிலேயே படிப்பை கைவிட்டார். பல இடங்களில் கூலி வேலை செய்து வந்த வருமானத்தில் ஒரு ஆசிரியரிடம் டியூஷன் சேர்ந்து கல்வி கற்றார். இவர் தையல் இயந்திரத்தின் பெல்ட்டை கட்டுவதற்கான வழியை கண்டுபிடித்த பிறகு, மிகவும் பிரபலமானார். 1907-ல் தையல் இயந்திரம், ஷூ பழுது பார்க்கும் கடையை தொடங்கினார். படிப்படியாக பல்வேறு தொழில்களில் கால் பதித்தார்.

1914-ல் புகை, நச்சு வாயுக்களிடம் இருந்து காப்பதற்கான பாதுகாப்பு கவசத்தை வடிவமைத்து காப்புரிமை பெற்றார். சுருள் கூந்தலை நேராக்கும் கிரீம், சீப்பு, கூந்தல் சாயம் போன்ற அழகுசாதனப் பொருட்களைக் கண்டுபிடித்தார்.

எளிமையான, திறன் வாய்ந்த டிராஃபிக் கன்ட்ரோல் சிக்னல் முறையைக் கண்டறிந்தார். இதை பயன்படுத்தி விபத்துகள் கட்டுப்படுத்தப்பட்டது. இதற்கும் காப்புரிமை பெற்றார்.

‘100 கிரேட்டஸ்ட் ஆப்பிரிக்கன் அமெரிக்கன்ஸ்” என்ற புத்தகத்தில் இவரது பெயர் இடம்பெற்றுள்ளது.

தன் உழைப்பாலும், திறமையாலும் பல கருவிகளைக் கண்டறிந்து, பல சாதனைகளை படைத்த கர்ரெட் மார்கன் தனது 86வது வயதில் (1963) மறைந்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button