Uncategorizedஇலக்கியம்

எழுத்தாளர் ஜெகசிற்பியன் காலமான நாள்.

எழுத்தாளர் ஜெகசிற்பியன் காலமான நாள்…🥲

ஜெகசிற்பியன் 1925 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 19ஆம் நாள் பிறந்தார்.பாலையன் எனும் இயற்பெயர்கொண்ட1939-இல் “நல்லாயன்’ என்ற இதழில், இவரது முதல் கதை வெளிவந்தது.1948-இல் இவர், “ஏழையின் பரிசு” என்ற தனது முதலாவது முதல் புதினத்தை எழுதினார். ‘காதம்பரி’என்ற மாத இதழ் நடத்திய போட்டியில், “கொம்புத் தேன்” என்ற இவரது குறும் புதினம் முதல் பரிசைப் பெற்றது. 1957-இல்ஆனந்த விகடன் நடத்திய வெள்ளி விழாப் போட்டியில் இவருடைய “திருச்சிற்றம்பலம்” என்ற வரலாற்றுப் புதினமும், ‘நரிக்குறத்தி’ என்ற சிறுகதையும் முதல் பரிசுகள் பெற்றன.

1958-இல் அவருடைய “அக்கினி வீணை” என்ற சிறுகதைத் தொகுதி,17 சிறுகதைகள் கொண்ட தொகுப்பாக வெளிவந்தது. அவரின் 154 சிறுகதைகள், 12 தொகுதிகளாக வெளிவந்துள்ளன.கொம்புத்தேன், தேவ தரிசனம், மண்ணின் குரல், ஜீவகீதம், மோக மந்திரம், ஞானக்குயில் உட்பட 16 சமூகப் புதினங்களை எழுதியிருக்கிறார். இவற்றுள் முப்பது சிறுகதைகளும், குறுநாவல்களும், ஆங்கிலம்,இடாய்ச்சு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன. ‘பாரத புத்திரன்’ சிறுகதைத் தொகுதிக்கு, தமிழ்வளர்ச்சித் துறை (1979-1981) பரிசளித்துச் சிறப்பித்தது. வானொலிக்காகப் பல நாடகங்களையும் எழுதியுள்ளார்.

கொஞ்சும் சலங்கை திரைப்படத்திற்கு உரையாடலை எழுதியவர் ஜெகசிற்பியன்.சென்னைப் பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பு, உயர்நிலைப் பள்ளிக் கல்வி ஆகியவற்றில், தமிழ்ப்பாட நூல்களில், ‘அவன் வருவான்’, ‘நொண்டிப் பிள்ளையார்’ ஆகிய சிறுகதைகள், பாடமாக வைக்கப்பெற்றன.

மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம், முதுகை (எம்.ஏ.) வகுப்பிற்கு ‘ஆலவாயழகன்’ என்ற வரலாற்றுப் புதினத்தையும், ‘நடை ஓவியம்’என்ற ஓரங்க நாடகத் தொகுப்பையும் பாடநூல்களாக வைத்தது.

1978 இதே மே 26-ஆம் தேதி ஜெகசிற்பியன் காலமானார். இவரது மறைவுக்குப் பிறகு தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் ‘திரு.வி.க. பரிசு’ மற்றும் ரூ. 5000 தமிழக அரசால் ஜெகசிற்பியன் குடும்பத்துக்கு வழங்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button