இசை ரசிகர்களால் மறக்கமுடியாத ஒரு பாடகி ்B.S. சசிரேகா…!

இசை ரசிகர்களால் மறக்கமுடியாத ஒரு பாடகி ்B.S. சசிரேகா…!
70,80,களில் தனது இனிய குரலால் பல அற்புதமான பாடல்களை பாடியவர் பாடகி B.S.சசிரேகா, அவரது பாடல்கள் பிரபலமான அளவுக்கு ,அவரது பெயரை பலர் அறிந்திருக்க மாட்டார்கள்..!
ஹம்மிங்,கோரஸ் இவற்றில் அன்று கலக்கியவர் இவர்..!
அழகான குரல்வளம் கொண்ட B.S.சசிரேகா இளையராஜா, டி.ராஜேந்தர் ,மனோஜ்கியான் இசையில் காலத்தால் கரையாத சூப்பர்ஹிட் பாடல்களை பாடியுள்ளார்..!
அவற்றை சற்றே நினைவுகூர்வோம்
1.இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்( ஜானகி உடன் இணைந்து பாடியது)( வட்டத்துக்குள் சதுரம்)
2. தென்றல் என்னை முத்தமிட்டது( டூயட்)
( ஒரு ஒடை நதியாகிறது)
3. வாழ்வே மாயமாம் பெருங்கதையாம் கடும் புயலாம்( காயத்ரி)
4.விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயரில் கலந்த உறவே( அலைகள் ஓய்வதில்லை) கல்வி கற்க நாளை செல்ல அண்ணன் ஆணையிட்டார் வரிகளை மிகவும் சோகமாக பாடியிருப்பார்
5.என் புருசன் தான் எனக்கு மட்டும் தான்
( கோபுரங்கள் சாய்வதில்லை)
டி.ஆர் இசையில்
1.ஏலே லம்ர ஏலே லம்ர( சூப்பர் ஹம்மி்ங்)
இந்திரலோகத்து சுந்தரி ( உயிருள்ள வரை உஷா)
2.எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி( உறவை காத்த கிளி)
3.போட்டானே முணு முடிச்சு தான்( என் தங்கை கல்யாணி)
4.இது ராத்திரி நேரம் அம்மம்மா அம்மம்மா ( தங்கைக்கோர் கீதம்)
5.சொல்லாம தானே இது மனசு தவிக்குது ( ஒரு தாயின் சபதம்)
மனோஜ்கியான் இசையில் ஆபாவணன் படங்களில
1. மாமரத்து பூ வெடுத்து,
ராத்திரி நேரத்து பூஜையில்
( ஊமை விழிகள்)
2.செம்மறி ஆடே செம்மறி ஆடு
உனை தேடும் தலைவன்
( உழவன் மகன் )
3.செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா
ஆத்துக்குள்ள ஏலேலோ( செந்தூர பூவே)
4. மலையோர குயில் கூவ கேட்டேன் ( இணைந்த கைகள்)
5.நான் முதலில் பாடிய பாட்டு ( தாய்நாடு)
மற்றும் நாம் இருவர். படத்தில்
திருவிழா திருவிழா இளமையின் தலைமையில் ஒரு விழா
மணல் கயிறு மந்திர புன்னகை பாடல் முழுவதும் ஹம்மிங்,
நாயகன் படத்தில் நிலா அது வானத்து மேல பாடலில் தச்தும தச்தும் ஹம்மிங்
ஒரு குடும்பத்தின் கதை படத்தில்
மலைச்சாரலில் ஒரு பூங்குயில்
கிழக்கு சீமையிலே படத்தில்
மானுத்து மந்தையில இப்படி பல இனிமையான பாடி அசத்திய பாடகி B.S.சசிரேகா அவர்களை என்றென்றும் மறக்க இயலாது..!
தனது 30 வயதிற்குள்ளாகவே பல இனிய பாடல்களை பாடி,பின்பு பாடும் வாய்ப்புகள் குறைந்து போன B.S.சசிரேகா அவர்களின் திறமைக்கு அவர் இன்னும் ஏராளமான பாடல்களை பாடி இருந்திருக்க வேண்டும் என்பதே இசை ரசிகர்களின் எண்ணம்..!
-ஈசன் எழில் விழியன்