சர்வதேச யோகா தினமின்று!

சர்வதேச யோகா தினமின்று!
இன்னிய தேதியிலே சர்வதேச அளவில் கடைபிடிக்கும் யோகா தினம் காரணமா யோகா கற்றுக் கொள்வது பிரபலமடைஞ்சு வருது. உடல்நலத்தை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள மக்கள் இதை கற்றுக் கொள்வதில் ஆர்வம் அதிகரிச்சுருக்குது.. அதிலும் உலகம் முழுவதும் பிரபலமடைந்து வருவதால் தற்போது இதை பயிற்றுவிப்பதற்கான பயிற்றுநர்களின் தேவையும் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்க்து.
அதாவது வளர்ந்து வரும் நாகரிக உலகத்தில் ஏகப்பட்ட நோய்களும் நம்மோடு சேர்ந்தே வளர்ந்து வருது. குறிப்பாக சமீபத்தில் உலகத்தையே உலுக்கி போட்ட கொரோனா போன்ற நுரையீரல் சார் தொற்றுகள், வைரஸ்கள் அப்படீன்னு பல நோய்கள் மேலும் வர காத்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் நமது வாழ்க்கை முறையை ஆரோக்கியமாக வைத்து கொள்ளாமல் நம்மால் இந்த நோய் தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியாது. அதற்கு பல நீண்ட காலமாகவே இந்திய மக்கள் பின்பற்றி வரும் முக்கியமான ஆயுதம் இந்த யோகக்கலை. அதன் அருமை அறிந்த ஐக்கிய நாடுகள் சபையும் அதன் உறுப்பு நாடுகளும் ஒவ்வொரு ஆண்டு ஜூன் 21ம் தேதியும் இந்த நாளை யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாளாக கடைபிடித்து வருகின்றன.
ஒவ்வொரு வருசமும் உலக யோகா தினம் இந்தியாவில் ஒவ்வொரு கருப்பொருளை மையமாக வைத்து கொண்டாடப்படுது. அதனடிப்படையில் இந்தாண்டு “Yoga For Vasudhaiva Kutumbakam” என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் ஒரே உலகம், ஒரே குடும்பம் அதற்கான யோகா என்பதாகும்.