கட்டுரை

சித்தரஞ்சன் தாஸ் நினைவு நாள் இன்று. ஜூன் 16, 1925.

தேசபந்து’ என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சுதந்திரப் போராட்டத் தலைவர் சித்தரஞ்சன் தாஸ் நினைவு நாள் இன்று. ஜூன் 16, 1925. 😢

வங்கதேசத் தலைநகர் டாக்கா அருகே விக்ரம்பூரில் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். மாணவப் பருவத் திலேயே விடுதலை இயக் கங்களில் கலந்துகொண்டார். இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்றவர். 1894-ல் கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணியைத் தொடங்கினார்.

தீவிர அரசியலில் ஈடுபட்டு, இந்திய தேசிய காங்கிரஸில் முக்கியத் தலைவராக உயர்ந்தார். ‘தேசபந்து’ (தேசத்தின் நண்பன்) என்று அன்புடன் அழைக்கப்பட்டார். இவரை தன் அரசியல் குருவாகப் போற்றினார் சுபாஷ் சந்திரபோஸ்.

ஒத்துழையாமை இயக்கத்தை காங்கிரஸ் கைவிட்டதால் அதிருப்தி அடைந்து, 1922-ல் சுயராஜ்ஜியக் கட்சியைத் தொடங்கினார். இதன் கொள்கைகளைப் பரப்ப ‘ஃபார்வர்டு’, ‘பங்களாசுதா’ ஆகிய பத்திரிகைகளைத் தொடங்கினார்.

பெண்கள் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்டவர். ஈஸ்வர் சந்திர வித்யாசாகரின் விதவை மறுமண இயக்கத்துக்கு உதவினார். தொழிற்சங்கங்கள் மூலம் தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று முழங்கியவர்.

தன் ஈகை குணத்தால் ஏழையான இந்த வள்ளல், தன் வீட்டையும் அதைச் சுற்றியுள்ள நிலங்களையும் ஆதரவற்ற பெண்களின் நலனுக்காக எழுதிவைத்தார். 55-வது வயதில் காலமானார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button