‘ தந்தையர் தினம்

‘ தந்தையர் தினம் ‘ என்பதே இப்போதுதான் தெரிந்தது.
அப்பா இருக்கும்போது அவ்வளவு அந்நியோன்யமாகப் பேசியதில்லை.
இல்லாதபோது எல்லா நாட்களிலும் ஏதோ ஒரு கணத்தில் அவர் நினைவு வராமல் இல்லை.
அன்பாக நாலு வார்த்தை அவரும் பேசியதில்லை…
நானும் பேசியதில்லை…
ஆனால் இப்போது ஏன் இந்த மனம் இப்படிக் கனக்கிறது?
இருக்கும் போது இன்னும் கொஞ்சம் நெகிழ்வாக , பக்குவப்பட்டு இருந்திருக்கக்கூடாதா இந்த மனம்?
இழந்த பிறகு வருந்தி என்ன பயன்?
இருப்பவர்கள் ஈகோ இன்றி தினம் இரண்டு வார்த்தையாவது உங்கள் தந்தையோடு பேசுங்கள். வேறொன்றும் எதிர்பார்ப்பதில்லை அவர்.
தூரத்தில் இருப்பவர்கள் அலைபேசியில் தந்தையர் தினம் என்று சொல்லி வாழ்த்து பெறுங்கள். அவரளவுக்கு உங்கள் நல்வாழ்வில் அக்கறை கொண்ட வேறொருவர் இல்லை.
இன்றே அன்பு செய்யுங்கள் …. இல்லை எனில்
என்றும் அது ஒரு வாழ்நாள் வலியாக மிஞ்சி நிற்கும்.
உங்கள் சிறிய உலகில் சிறப்பாக வாழ்ந்தீர்கள்.
உங்களை நினைப்பது மட்டும்தான் இயலும் இந்த நாளில் உங்களுக்குக் கேட்கிறதோ இல்லையோ ஒரு முறை அழைத்துக் கொள்கிறேன்…

அப்பா….
*
பிருந்தா சாரதி
*
