சல்மான் ருஷ்டி

சல்மான் ருஷ்டி !
ஜூன் 19, 1947 இந்தியாவில் பிறந்த பிரித்தானிய எழுத்தாளர் சர் அகமத் சல்மான் ருஷ்டி. இவரின் 1981இல் வெளிவந்த இரண்டாம் புதினம் “மிட்னைட்ஸ் சில்ட்ரென்” காரணமாக பெரும் புகழ் அடைந்தார். இந்த நாவல் புக்கர் பரிசு வென்றது. இவரது நாவல் இந்திய தீபகற்பம்|இந்தியச் சூழலில் எழுதப்பட்டவைகளாகும்.. இவரது இலக்கிய வகை மாய யதார்த்தவாதம் என்ற தன்மையிலானது. கிழக்கு மற்றும் மேற்கு உலகங்களிடையே உள்ள தொடர்புகள். தாக்கங்கள் மற்றும் குடிப்பெயர்வுகளை அதுசார்ந்த பிரச்சனைகளை அடிப்படையாக கொண்டு எழுதுபவர்.
1988இல் இவரின் நான்காம் நாவலான த சாத்தானிக் வெர்சஸ் வெளிவந்தது. இந்த நாவல் இஸ்லாமிய அடிப்படை வாதத்தை கேள்வி எழுப்பிய காரணத்தால் உலகில் பல முஸ்லிம் அமைப்புகள் ருஷ்டிக்கு எதிராக போராட்டம் செய்தனர். அப்போதைய ஈரானின் தலைவர் அயத்தொல்லா கொமெனி ருஷ்டியை கொலை செய்யவேண்டும் என்று பெப்ரவரி 14, 1989 அன்று ஒரு ஃபத்வா வெளியிட்டுள்ளார். இதனால் ருஷ்டிக்கு பிரித்தானிய காவல்துறை பாதுகாப்பு கொடுத்துள்ளது. ஜப்பானில் இப்புதினத்தை மொழிபெயர்ப்பு செய்தவர் 1991இல் கொல்லப்பட்டார்.
2007ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசி இவரது இலக்கியச் சேவைக்காக “நைட் பேச்சிலர்” என்ற சர் பட்டம் வழங்கியது. பிரான்சின் கலை மற்றும் எழுத்திற்கான கௌரவ அமைப்பில் இவருக்கு கமாண்டர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 2007இல் அட்லான்டா, ஜோர்ஜியாவின் எமரி பல்கலைக்கழகத்தில் சிறந்த எழுத்தாளர் என்ற ஐந்தாண்டு பதவியில் அமர்ந்தார்.
2008இல் அமெரிக்க கலை மற்றும் எழுத்து அகாடெமியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். டைம்ஸ் இதழ் 1945க்குப் பிறகான 50 மிகச்சிறந்த பிரித்தானிய எழுத்தாளர்களில் இவரை பதின்மூன்றாவது இடத்தில் மதிப்பிட்டுள்ளது.
ஆனாலும் சல்மான் ருஷ்டி அச்சத்துடனேயே வாழ்ந்து வரும் சூழல் இருந்தது. இந்த நிலையில் நியூயார்க்கில் உள்ள சாட்டகுவா நிறுவனத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கலந்து கொண்டார். அப்போது அவரை பத்திரிகையாளர் ஒருவர் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது சல்மான் ருஷ்டியை அடையாளம் தெரியாத நபர் மேடைக்கு சென்று மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினார். இதை பார்த்த பார்வையாளர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். விடிய விடிய விடாது கொட்டிய கனமழை..பெருகிய வெள்ளம்..சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை உடனே மேடையில் இருந்தவர்கள் அந்த நபரை தடுத்தனர். சல்மான் ருஷ்டிக்கு கழுத்து, கைகளில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்தார். பின்னர் அந்த நிகழ்ச்சிக்கு பார்வையாளராக வந்தவர்களில் மருத்துவர் இருந்ததால் அவர் ருஷ்டிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து உடனடியாக விமான ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரது உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு நீண்ட நேரம் அறுவை சிகிச்சை நடந்தது. இந்த நிலையில் சல்மான் ருஷ்டிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறுகையில் சல்மான் ருஷ்டிக்கு ஒரு கண்பார்வை பறிபோய் விட்டது
இந்த சம்பவத்திற்குப் பின் கடந்த 20 ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.அப்போது, அவர் தன் மீதான கத்திக்குத்து தாக்குதல் பற்றி புத்தகம் எழுதப் போவதாகக் கூறியுள்ளார்.