கப்பலில் மிதந்து கொண்டே உணவருந்தலாம்!

கப்பலில் மிதந்து கொண்டே உணவருந்தலாம்!
தமிழக சுற்றுலாத் துறை அமைச்சகம் மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து சென்னையை அடுத்த முட்டுக்காடு பகுதியில் மிதக்கும் உணவகத்தை அமைக்க ஏற்பாடுகளைச் செய்துள்ளனர் அடுத்த 3 மாதத்தில் இந்த மிதக்கும் உணவகம் செயல்பாட்டிற்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது. இது குறித்து விரிவாகக் காணலாம்.
சென்னையைச் சேர்ந்த பலர் வார விடுமுறையைக் கழிக்கச் சென்னையை அடுத்த முட்டுக்காடு பகுதிக்குச் சுற்றலா வருவது அதிகமாகி வருகிறது. இதையடுத்து சுற்றுலாவை மேம்படுத்தத் தமிழக சுற்றுலாத்துறை முட்டுக்காடு பேக் வாட்டர் பகுதியில் இயங்கும் போட் ஹவுசில் மிதக்கும் உணவகத்தை உருவாக்க முடிவு செய்துள்ளனர். இதற்காகக் கொச்சியைச் சேர்ந்த கிராண்டியர் மெரைன் இண்டர்நேசினல் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
அதன்படி அந்நிறுவனம் ஒரு கப்பலை வாங்கி அந்த கப்பலை உணவகம் போல மாற்றியமைத்து அதை முட்டுக்காடு பேக் வாட்டர் பகுதியில் இயக்கும். மக்கள் இந்த கப்பலில் ஏறி தண்ணீரில் மிதந்துக்கொண்டே சாப்பிடும் அனுபவத்தைப் பெறலாம். இதற்கான திட்டம் மற்றும் கப்பலின் 3டி மாடல் எல்லாம் தயாராகிவிட்டது. தற்போது இந்த கப்பலைக் கட்டுமானம் செய்யும் பணியைத் தனியார் நிறுவனம் செய்து வருகிறது.
இந்த சேவை மூலம் தமிழ்நாடு அரசுக்கு லைசென்ஸ் கட்டணத்தை இந்த சேவையை நடத்தும் தனியார் நிறுவனம் செலுத்த வேண்டும். அதன் மூலம் அரசுக்கு வருமானம் கிடைக்கும். தற்போது இந்த மதிக்கும் உணவக கப்பலைத் தனியார் நிறுவனம் 2 அடுக்குகளாகத் தயாரிக்க முடிவு செய்துள்ளது. இதில் கீழ்த் தளத்தை ஏசி ரெஸ்டாரெண்டாகவும், மேல் தளத்தை ஓப்பன் ரெஸ்டாரென்டாகவும் கட்டமைக்கத் தயார் செய்துள்ளது. இது போக இந்த கப்பலில் லைட் கவுண்டர் கிச்சன்களும் இடம் பெறும். அங்கு வாடிக்கையாளர்கள் கேட்கும் உணவுகளை அங்கேயே சுடச்சுடத் தயார் செய்து டேபிளுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆனால் தனியாகத் தரையில் ஒரு கிச்சன் இருக்கும் அங்கும் முக்கியமான பொருட்கள் எல்லாம் தயார் செய்யப்பட்டு அவ்வப்போது கப்பலுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த மிதக்கும் ரெஸ்டாரென்டில் மொத்தம் 100 பேர் அமர்ந்து சாப்பிடும் வடி வசதி செய்யப்பட்டுள்ளது. கடலை பார்த்தபடியும் அமர்ந்து சாப்பிடும் சீட்களும், குடும்பத்தினருடன் சேர்ந்து மொத்தமாக அமர்ந்து சாப்பிடும் சீட்களும் தனித்தனியே இருக்கிறது. தமிழக அரசு இதை ஒரு முயற்சி திட்டமாகவே அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு அதிகமான வரவேற்பு கிடைத்தால் தொடர்ந்து இதே பகுதியில் மிதக்கும் ரெஸ்டாரென்ட்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, வேறு பகுதியிலும் இதே போல ஒரு திட்டத்தைச் செயல்முறைக்குக் கொண்டு வரத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது
:thanks https://tamil.drivespark.com/