Uncategorizedஇலக்கியம்
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பிறந்தநாள்”

“இன்று
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பிறந்தநாள்”
பாமரனாகப் பிறந்தான் அவன் பாவலனாக வளர்ந்தான்
கோமணம் கட்டிய ஏழைகளுக்காக
கொள்கை பாடல்கள் தந்தான்…!
அறிவை வளர்த்து நம்பிக்கை கொடுக்கும்
அவனது ஒரு பாட்டு
ஆளை ஏய்க்கும் மனிதருக்கெல்லாம்
அது இடும் தனிப்பூட்டு…!
பாழும் ஏழை சனங்களின் வயிறும்
பசியை மறந்தது
அவன் பாட்டாலே
பாயும் புலியாய் எலியும் மாறும்
அந்த பாட்டை தினமும் கேட்டாலே…!
கடவுளை பாடி
காதலைப் பாடி இயற்கை
காட்சியைப் பாடும்
கவிஞர்கள் வாழ்ந்த காலத்திலே…!
கல்லை உடைப்பவனை கலப்பை சுமப்பவனை
கருத்தில் கொண்டு
கவிதை சொன்னான் வேகத்திலே…!
உழைப்பும் உயர்ந்த கல்வி என்று
உரத்து சொன்னது அவன்தானே ஏச்சுப்
பிழைக்கும் ஈனர்களை எல்லாம்
இடுபலி என்றான் சரிதானே….!

மயில் கவி
சுபா