படைப்பாளிகள் நூல்களாய் வாழ்கின்றனர்

தமிழுக்கு வணக்கம் 1000
படைப்பாளிகள் நூல்களாய் வாழ்கின்றனர்
தகவல் பரிமாற்றத்திற்கு முக்கியக் காரணம் மொழி.
மொழிக்குத் தேவை எழுத்துக்கள்.
எழுத்துக்கள் தரும் சொற்கள்.
எழுத்துக்கள் சொற்களாகவும், நல்ல பொருள் பதிந்த கருத்துக்கள் ஒரு சிந்தனை மிகு படைப்பாளன் மனதில் உதித்து அந்தப் படைப்புகள் வெளிவரும் பொழுது காவியமாகலாம், கவிதையாகலாம், கட்டுரையாகலாம்.
நம் தமிழ் மொழி உலக அளவில் மூத்த மொழி என்றாலும், நாம் அறிந்த இலக்கண நூல் தொல்காப்பியம் என்றாலும், இந்த இலக்கண நூலின் அடிப்படையில் பல இலக்கியங்கள் தொடர்ந்தாலும், நம் மொழிக்கு வேராய் இருந்தது முதலில் எழுத்துக்களை தாங்கிய சொற்கள் தானே.
உயிர் எழுத்தும், மெய் எழுத்தும் சேர்ந்து உயிர்மெய் எழுத்தாகி அறிவுடையவர்கள் பலரின் ஆளுமைக்கு உட்பட்டு அன்றைய காலத்தில் பனை ஓலை மூலம் சிந்தனையால் செய்யுள்களாக படைக்கப்பட்டு, அதற்கு பின் வந்தவர்கள் அந்தச் செய்யுள்களை நல்ல படைப்புகளை படித்து பொருள் உணர்ந்து தொகுத்தும் இன்று நூல்களாய் நாம் படிக்கவும், நல்ல படைப்புகளை அறியவும் நம் முன்னோர்கள், படைப்பாளர்களாய் இருந்தனர்.
பிற மொழி அறிஞர்களாலும் வந்து மிகப் பெருமையுடன் நம் முன்னோர்களின் படைப்புகளை பாராட்டினர். தொன்மை மிக்க தமிழ் மொழியின் செய்யுள்கள் அவர்களால் ஈர்க்கப்பட்டும் l மேலோங்கியதாய் இருந்தது நம் தமிழ் மொழியின் படைப்புகள்.
2000 ஆண்டுகளுக்கு முன்பே நல்ல படைப்புகளை தந்த பல புலவர்களின் பெயர் இன்றும் நாம் அறிந்து கொண்டிருக்கிறோம்.
அதே சமயம் நம்முடைய தலைமுறையில் தாத்தாவின் பெயர் நினைவு இருக்கும். அவருடைய தாத்தாவின் பெயரை அனேகமாக நாம் அறிவதற்கு வாய்ப்பில்லை.
என்னதான் இருந்தாலும் ஒரு 500 ஆண்டுகளுக்கு முற்பட்டு வாழ்ந்த நமது முன்னோர்களின் பெயர் நாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அதே சமயம் தமிழ் மொழியில் உள்ள இலக்கண நூல், சங்க நூல்களின் செய்யுள்களை எழுதிய படைப்பாளிகளின் படைப்புகளில் பெயர் நாம் அறிகிறோம்.
இது நம் மொழிக்கு மட்டுமல்ல,உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் இன்று நூல்களாய் புத்தகங்களாய் படைத்த படைப்பாளிகளின் பெயரையும், சிந்தனை மிக்க நல்ல கருத்துக்களை அறிந்து அறிந்து இன்புறுகிறோம்.
படைப்பாளிகள் என்றென்றும் அவர்கள் படைத்த புத்தகங்கள் வழியே இம்மண்ணில் நூல்கள் வழியாய் என்றென்றும் வாழ்கின்றனர்.
முருக. சண்முகம்
[ தமிழ் மொழியில் புலமை பெற்ற திரு முருக. சண்முகம் அவர்கள் ஒரு வாட்ஸ் up குரூப் ல தொடர்ந்து தினம் தமிழ் மொழி சிறப்புகள் பற்றி எழுதி வருகிறார். நேற்று இவரின் 1000 வது பதிவு இது.தொடர்ந்து தமிழ் மொழிக்கு சிறப்பு செய்யும் இவருக்கு எங்களது பொன் எண்ணம் இணைய இதழ் சார்பாக வாழ்த்துக்கள்.