மலர்க்கண்ணன் பதிப்பகமும் மேம் கிரியேசன்ஸ் நிறுவனமும் இணைந்து 76வது சுதந்திர தின விழா

ஆகஸ்ட் 13, 2023 சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மகாகவி பாரதியார் நினைவு இல்லத்தில் மலர்க்கண்ணன் பதிப்பகமும் மேம் கிரியேசன்ஸ் நிறுவனமும் இணைந்து 76வது சுதந்திர தின விழாவினை ஏற்பாடு செய்திருந்தினர். அவ்விழாவில் 11 வகையில் 76 சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
இவ்விழாவிற்கு திரைப்பட இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் அவர்கள் தலைமையேற்று அனைவருக்கும் விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட இயக்குனர் சோழன் மு.களஞ்சியம், சமூக சேவகர் லயன் ஷீபா லூர்தஸ், சின்னத்திரை நடிகை சந்தியா , திருவல்லிக்கேணி வியாபாரிகள் சங்க தலைவர் வி.பி.மணி மற்றும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் இளைய கட்டபொம்மன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள் .விழா இறுதியில் வந்த TUJ தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் நிறைவுரையாற்றினார். முன்னதாக லயகதி ரேகாலயா பள்ளி மாணவிகளின் வரவேற்பு நடனம் ஆடப்பட்டது .
தமிழகம் முழுவதிலும் இருந்து விருது பெற வருகை தந்திருந்தனர். விழா முடிவில் மலர்க்கண்ணன் பதிப்பக ஆசிரியர் மற்றும் மேம் கிரியேசன்ஸ் நிறுவனத்தின் இயக்குனரான கவிஞர் க.மணிஎழிலன் அவர்கள் விழா ஏற்புரையாற்றினார்.

