இலக்கியம்
என்னமோ போடா சர்வேஷா

திருமணம் என்பதே ஒரு பந்தம்
எதிர்பார்ப்பின் உட்சம்…
எங்கோ யாருக்கோ பிறந்த இருவர் இணையும் இடம்…
அல்லது சமூகம் கற்றுக்கொடுத்ததாகவோ இருக்கலாம்…
ஆனால் அங்கேயே எதிர்பார்க்காதே என்று இன்று ஒரு சாரார் சுற்றிக் கொண்டு இறக்கிறார்கள்… இதில் பாலின வேறுபாடு இன்று மங்கிக் கொண்டே வருகிறது…
ஒழுக்கமும் ஒற்றுமையும்
அன்பும் அரவணைப்பும்
தேற்றுதலும் போற்றுதலும்
கை கொடுப்பதும்
ஊக்கப் படுத்துவதும்
வாழ்கை துணையும்
வழித் துணையும்
என்று ஆன பின்பு…
எண்ணமும் செயலும் வேறு இடம் செல்லும்…
எதிர்ப்பார்ப்பு இல்லாமல் இரு என்று கூறுவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்…
என்னமோ போடா சர்வேஷா !
எண்ணமும் எழுத்தும்
Devi P Kannan
