வரிகளை எந்தக் காரணம் கொண்டும் இசை விழுங்கிவிடக்கூடாது என்பதில் ராஜா கவனமாக இருப்பார்

விடுதலை படத்தில் இளையராஜா எந்தக் கவிஞனுக்கும் தான் சலளத்தவன் அல்ல என்பது போல எழுதிய பாடல்தான் * வழிநெடுக காட்டுமல்லி பூத்திருக்கு பூத்திருக்கு …யாரும் அதப் பாக்கலையே பாக்கலையே*
என்ற பாடல் இன்னும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. காதலை குழைத்து தருவதற்கென்றே அமைந்த குரல் ராஜாவுடையது….ரஹ்மானுக்கும் ராஜாவுக்கும் உள்ள வித்தியாசம்
வரிகளை எந்தக் காரணம் கொண்டும் இசை விழுங்கிவிடக்கூடாது என்பதில் ராஜா கவனமாக இருப்பார். இந்தப் பாடலிலும் அவ்வாறே. பெண் குரலும் சொல் உச்சரிப்பில் சொற்களை விழுங்கவில்லை என்பது ஆறுதல்.
இசையும், வரிகளும், குரலும் சமஅளவில் Hormonyயாக பயணிக்க வேண்டும் என்பதில் ராஜா கவனமாக இருப்பார்….ரஹ்மான் இசையை மட்டும் Dominate பண்ண வைப்பார்…இசையே அனைத்தும் என்பது அவரது Ego
விஸ்வநாதன், கேவி மகாதேவன், ஏ.எம்.ராஜா போன்ற முந்தைய மேதைகள் வரிகளும், குரலுமே முக்கியம் என்று கருதினர். இசையை Interlude டாக மட்டுமே பயன்படுத்தினர்.
பாட்டு வரிகளோடு தாளம் மட்டுமே வரும். கண்ட இசைக் கோவைகள் வராது
விடுதலை படத்தில் இன்னொரு பாடலை கவிஞர் நெல்லை கண்ணன் மகன் சுகா என்பவர் எழுதி உள்ளார். தனுஷ் அசத்தலாக பாடியுள்ளார்.
ஒன்னோட நடந்தா கல்லான காடும் கூத்தாடும் பூவனமாகும்,
என்ற பாடல் ஒரு ரம்மியமான பாடல். காதல் குழைவும் நெகிழ்வுமான பாடல்
என்னிடம் கூட சிலர் சொன்னார்கள் “இன்றைய தலைமுறை இளைஞர்கள் ரஹமானைத்தான் விரும்புகின்றனர் என்று.
என் பேரன் ,(19..வயது) சொல்கிறான்..
விடுதலை பாடல்கள் சுமார்தான்.
பொன்னியின் செல்வன் 2 பாடல்கள் நன்றாக இல்லை..
ரஹமான் ps2, வில் இவர்களை கவரவில்லை தானே
மெலடி பாடல்களை இந்த தலைமுறை ரசிப்பது இல்லை என சொல்கிறார்கள்
ஆனால் ஜெய்பீம் பாடல்களை கொண்டாடினார்களே…..இசை சாண்டில்யனின் பேரன்
- ஜெயதேவன்