Uncategorized

நீங்கள் நடிக்க சென்றால் உங்களுக்காக பாடல்கள் காத்திருக்காது

அன்று இளையராஜா கொடுத்த அட்வைஸ், 38 வருடம் கழித்து மனோவிற்கு கிடைத்த கெளரவம் – ரசிகர்கள் வாழ்த்து.

தனக்கு கிடைத்து இருக்கும் பட்டம் குறித்து பாடகர் மனோ பதிவிட்டு இருக்கும் தகவல் வைரலாகி வருகிறது.தமிழ் சினிமாவில் எண்ணெற்ற பாடல்களை பாடி மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் மனோ. இவரை பெரும்பாலும் spbயின் மகன் என்று தான் நினைத்து இருந்தனர். மனோ பாடகர் மட்டுமல்லாது நடிகர் ரஜினிகாந்த் படங்கள் தெலுங்கில் வெளியாகும் போதெல்லாம் அவருக்காக தெலுங்கில் டப்பிங் பேசியிருக்கிறார் மனோ. அதே போல நடிகர் கமல்ஹாசனுக்கு எஸ்பிபி தெலுங்கில் டப்பிங் பேச, சதிலீலாவதி மற்றும் பம்மல் கே சம்மந்தம் படங்களில் மட்டும் மனோ டப்பிங் பேசியிருப்பார்.

இந்த நிலையில் மனோ தனது ட்விட்டர் பக்கத்தில், தனக்கு ரிச்மண்ட் கேப்ரியல் யுனிவர்சிட்டி டாக்டர் பட்டம் வழங்கியிருப்பதை அறிவித்திருக்கிறார். அவரது பதிவில், 15 இந்திய மொழிகளில் 25 ஆயிரம் பாடல்கள், 38 வருடங்கள் இந்திய இசை துறையில் சாதனை புரிந்ததற்காக ரிச்மண்ட் கேப்ரியல் யூனிவர்சிட்டி எனக்கு டாக்டர் பட்டம் வழங்கியிருக்கிறது. என்ன நேசித்தவர்களுக்கு அன்பும் நன்றியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பாடகர் மனோ பின்னணி பாடல்களை பாடியதோடு சில படங்களில் கூட நடித்து இருக்கிறார். இறுதியாக சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் என்ற படத்தில் மிர்ச்சி சிவாவின் தந்தையாக நடித்து இருந்தார். இதற்கு முன்னர் பல நிகழ்ச்சிகளில் பாடகர் மனோ கலந்து கொண்டிருந்தாலும் நடித்த படங்களை பொறுத்த வரையில் பெரிதாக நடிக்கவில்லை. அதற்கு காரணம் இளையராஜா தான் என்று மனோ கூறி இருந்தார்.

கமலஹாசன் நடித்த “சிங்காரவேலன்” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாடகர் மனோ நடித்திருப்பார். ஆனால் அந்த திரைப்படத்திற்கு பிறகு பெரிதாக நடிக்கவில்லை. இந்நிலையில் “சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும்” படத்தின் செய்தியாளர் சந்திப்பில் இது பற்றி கேட்கப்பட்டது. அதாவது “சிங்காரவேலன்” திரைப்படத்திற்கு பிறகு பாடகர் மனோ எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை.

அதனால் மனோ ஏன் திரைப்படங்ககளில் நடிக்கவில்லை, இளையராஜா நடிக்க வேண்டாம் என தடுத்து விட்டாரா? அல்லது வாய்ப்புகள் தவறும் என கூறினாரா? என்று அவரிடம் பிரபல ஊடகம் கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த பாடகர் மனோ கூறுகையில் “நீங்கள் நடிக்க சென்றால் உங்களுக்காக பாடல்கள் காத்திருக்காது என இளையராஜா கூறினார். ஏனென்றால் நான் “சிங்காரவேலன்” படத்தின் படப்பிடிப்பில் இருந்த போது நான் பாடிக்கொடுக்க வேண்டிய பாடல்கள் இருந்தது.

ஆனால் 15க்கும் மேற்பட்ட பாடல்களை நான் படப்பிடிப்பு முடிந்த பிறகுதான் பாடிக் கொடுத்தேன். அப்போதுதான் இளையராஜா இதனை தெரிவித்தார் அது எனக்கு கொடுத்த மிகப்பெரிய எச்சரிக்கையாக நான் எடுத்துக் கொண்டேன் என தெரிவித்தார் பாடகர் மனோ. அன்று இளையராஜாவின் பேச்சை கேட்டு பாடுவதில் கவனம் செலுத்திய மனோவிற்கு இந்த பட்டம் காலதாமதமே.

நன்றி: Behind Talkies

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button