தமிழ் என்றும் அமிழ்தே –

குறுந்தொகையின் இந்த பாடலை இயற்றியவர் புலவர்: மாமலாடன்
தமிழ் என்றும் அமிழ்தே –
குறுந்தொகையின் இந்த பாடலை இயற்றியவர் புலவர்: மாமலாடன்
ஆம்பற் பூவின் சாம்ப லன்ன
கூம்பிய சிறகர் மனையுறை குரீஇ
முன்றி லுணங்கன் மாந்தி மன்றத்
தெருவினு ண்டானது குடைவன வாடி
இல்லிறைப் பள்ளித் தம் பிள்ளையொடு வதியும்
புன் கண் மாலையும் புலம்பும்
இன்றுகொ றோழி யவர் சென்ற நாட்டே”.
ஆம்பல் மலரின் நிறத்தையொத்த குவிந்த சிறகுகளையு டைய வீட்டின்கண் தங்கும் குருவிகள், முற்றத்தில் உலருந்தானியங்களைத்தின்று பொது இடத்தில் கண்ணுள்ள எரு வினது நுண்ணிய பொடியைக் குடைந்து விளையாடி, வீட்டில் உள்ள இடத்தே தம்முடைய குஞ்சுகளோடு தங்கி இருக்கும். பிரிந்தார்க்குத் துன்பத்தைத் தரும் மாலைக்காலமும், தனிமையும் தலைவனைப் பிரிந்த நேரத்தில் துன்பமில்லையோ?
வீட்டில் இருக்கும் குருவிகளும் இரை தேடி தம் குஞ்சுகளு க்கு உணவு கொடுத்து பின்னர் மாலையில் குஞ்சுகளோடு தங்கி இருக்குமாம்.
ஆனால் தம்மை, தனிமைப்படுத்தி துன்பம் தரும் மாலைக்காலத்தில் தலைவனே பிரிந்ததையெண்ணி தம் தோழியிடம் புலம்புகிறாள் தலைவி.
