Uncategorized

இன்டர்நெட் தேவையில்லை: கூகுளில் இதை செய்து பாருங்க; சீக்ரெட்ஸ் ட்ரிக்ஸ்

கூகுள் தகவல் 

கூகுள் தகவல் தேடும் தளமாக மட்டுமல்லாது சில சுவாரஸ்ய விஷயங்களை கொடுக்கிறது.

கூகுள் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் Search Engine தளமாகும். அனைத்து துறை சார்ந்த தகவல்களையும் உள்ளடக்கிய ஒரு தளமாகும். நீங்கள் தேடுகின்ற தகவல்களை உடனுக்குடன் கொடுக்கும். இன்டர்நெட் மூலம் கூகுள் சேவையை பயன்படுத்தலாம்.
ஆனால் அதே நேரத்தில் இன்டர்நெட் இல்லாமலும் சில சுவாரஸ்ய விஷயங்களை கூகுள் நமக்கு கொடுக்கிறது.

முதலில் வீட்டில் இருக்கும் போதும், வேலை நேரங்களில் போர் அடித்தால் சிறிது நேரம் கூகுள் கேம்ஸ் விளையாடலாம். ஆஃப்லைன் டைனோசர் கேம் விளையாடலாம். இதை கூகுள் பிரவுசர் பக்கத்தில் விளையாடும் வசதியை வழங்குகிறது

அடுத்ததாக Search Bar-ல் “Askew” என டைப் செய்து Enter கொடுக்கவும். உங்கள் கூகுள் பக்கம் ஒரு பக்கமாக சாய்ந்து காணப்படும். இது உங்களுக்கு புது வித அனுபவத்தை கொடுக்கும். உங்கள் கணினியில் ஏதோ தவறு என நினைக்க வேண்டாம்.
திரையில் எந்த பிரச்சனையும் இருக்காது. எழுத்துக்கள் மட்டும் கீழ் நோக்கி சாய்ந்து காணப்படும். அடுத்த பக்கத்திற்கு சென்றவுடன் இது சரியாகி விடும்.

இப்போது Search Bar-ல் “Google Orbit” என டைப் செய்யுங்கள். இதை செய்யும் போது “Google Sphere – Mr. Doob” என்று வரும். இதை கிளிக் செய்வதன் மூலம், உங்கள் ஹோம் பேஜ் வட்டமாக வரும். அங்கு வரும் காயினை நகர்த்தி பூமியைச் சுற்றி வரலாம். இது உங்களுக்கு ஒரு சுவாரஸ்ய அனுபவமாக இருக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button