ஆன்மீகம்

ஸ்ரீராம நவமி

.
நாளை ஸ்ரீராம நவமியன்று
ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தில் ஸ்ரீராமர் பட்டாபிஷேகம்
பாராயணம் பண்ணுவோம்.
புண்ணியம் பெறுவோம்
ஜெய் ஸ்ரீ சீதாராம்

சுந்தரகாண்டம்:
ஸ்ரீ இராமரின் பட்டாபிஷேகம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏

இலங்கையில் இருந்து திரும்பிய அனைவரும் அயோத்தி நகரை அடைந்தனர். அயோத்தி மக்கள் அனைவரும் தாயை பிரிந்த குழந்தை போல் இராமரை கண்டு அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். அனைவரும் அரண்மனை அடைந்தனர்.

இராமர் பரதனிடம், “தம்பி! அனுமன், சுக்ரீவன், விபீஷணனுக்கு தேவையான வசதிகளைக் செய்துக் கொடுத்து அரண்மனையை சுற்றி காண்பிப்பாயாக..” என்றார். பிறகு பரதன் அரண்மனையை சுற்றி காண்பித்தான்.

அப்போது சுக்ரீவன் பரதனிடம், “பரதரே, முடி சூட்டும் விழாவிற்கு ஏன் தாமதமாகிறது எனக் கேட்டான். பரதன், ஐயனே! பட்டாபிஷேகத்திற்காக நாடு முழுவதும் உள்ள புண்ணிய தீர்த்தங்களை கொண்டு வரத்தான் தாமதத்திற்கு காரணம்..” என்றான்.

உடனே சுக்ரீவன், அனுமனை நோக்கினான். சுக்ரீவனின் நோக்கத்தை அறிந்த அனுமன் புண்ணிய தீர்த்தங்களை கொண்டு வர புறப்பட்டான்.

அதன் பிறகு பரதன், வசிஷ்ட முனிவரிடம் சென்று, “குருவே! அண்ணல் இராமருக்கு விரைவில் பட்டாபிஷேகம் செய்ய வேண்டும். பட்டாபிஷேகம் செய்ய உகந்த நாளை தாங்கள் கணிந்து கூறுங்கள்..” என்றான்.

வசிஷ்ட முனிவர், நல்ல நாட்களை கணித்து பார்த்து, ” பரதரே! நாளையே நாம் இராமருக்கான முடிசூட்டும் விழாவை வைத்துக் கொள்வோம்..” என்றார்.

இதைக் கேட்டு பரதர் அளவற்ற மகிழ்ச்சி அடை ந்தார். இச்செய்தி தாய்மார்களுக்கும், அனுமன், சுக்ரீவன், விபீஷணனுக்கும் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டு அனைவரும் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். இச்செய்தி நாட்டு மக்கள் அனைவருக்கும் அறிவிக்கப்பட்டது. மக்கள் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். இராமருக்கு பட்டாபிஷேகம் செய்வதற்கான ஏற்பாடுகள் விரைவாக நடக்க தொடங்கியது.

ஸ்ரீராமருக்கு நாளை முடிசூட்டும் விழா என்ற செய்தி ஓலை மூலம் மன்னர்களுக்கும், சிற்றரசர்களுக்கும் அனுப்பப்பட்டது. குகனுக் கும் இராமரின் முடிசூட்டும் விழாவிற்கு வரும்படி அழைப்பு விடப்பட்டிருந்தது.

அயோத்தி மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளை அலங்கரித்தனர். மறுநாள் பட்டாபிஷேக த்திற்கான மண்டபத்தை பொன்னாலும், மலர்களாலும் அலங்கரித்தனர். அப்பொழுது அனுமன், பல நாடுகளிலிருந்து புண்ணிய தீர்த்தங்களை கொண்டு வந்தான்.

இராமரின் பட்டாபிஷேகத்தை காண பல நாடுகளிலிருந்தும் மன்னர்களும், சிற்றரசர்களும் குவிந்த வண்ணம் இருந்தனர். குகனும் பட்டா பிஷேகத்தை காணவந்து சேர்ந்தான் பட்டாபி ஷேகத்திற்கு தேவையான பொருட்கள் எல்லாம் அமைச்சர் சுமந்திரர் தலைமையில் கொண்டு வரப்பட்டது.

வசிஷ்டர் முதலான முனிவர்கள் வேள்விகளை ஆரம்பித்தனர். இராமரும் சீதையும் அரியணையில் அமர்திருக்க, பரதன் வெண்கொற்ற குடையை பிடித்தான். இலட்சுமணனும், சத்ரு க்கனும் இருப்புறங்களில் நின்றுக் கொண்டு வெண்சாமரை வீசினர்.

அயோத்தி மக்கள் அனைவரும் தங்களுக்கே முடிசூட்டு விழா என்பது போல் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். வசிஷ்டர் முதலான முனிவர்கள் வேதங்கள் ஓதினர். அனுமன் இராமரின் பக்கத்தில் பணிவாக நின்று கொ ண்டிருந்தான். கொண்டு வரப்பட்ட புண்ணிய தீர்த்தங்களால் இராமருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

அபிஷேக நீர் இராமரின் தலை முதல் பாதம் வரை தொட்டுச் சென்றது. அதேபோல் அபிஷேக நீர் அனுமனின் தலையில் பட்டு அனுமனை கௌரவிப்பது போல் இருந்தது. இதைப் பார்த்த அனைவரும் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். கௌசலை, சுமித்திரை, கைகேயி கண்களில் ஆனந்தக் கண்ணீர் பொங்கி வழிந்தது.

வசிஷ்டர் முதலான முனிவர்கள் மந்திரங்கள் பாடி வாழ்த்த, திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளலின் குலத்து முன்னோர்கள் மகுடத்தை எடுத்துக் கொடுக்க, அதனை
வாங்கி வசிஷ்ட முனிவர் ஸ்ரீராமருக்கு சூட்டினார். சுபமுகூர்த்த நன்னாளில், முனிவர்கள் வேதங்கள் ஓத இராமரின் பட்டாபிஷேகம் இனிதாக நடைப்பெற்றது.

அப்பொழுது இராமர், திருமால் போல் அனை வருக்கும் காட்சி அளித்தார். தன் பட்டாபிஷேகம் முடிந்த பின் இராமர், பரதனுக்கு இளவரசர் பட்டம் சூட்டி தனது ஆட்சியை நீதிநெறி தவறா மல் செங்கோலுடன் ஆட்சி புரியுமாறு கட்டளை யிட்டார். இதைப் பார்த்து முனிவர்களும், தேவ ர்களும் அளவற்ற மகிழ்ச்சி அடைந்து மலர்மழை தூவினர். பட்டாபிஷேகம் முடிந்த பிறகு இராமர் ஏழை, எளியவர்களுக்கு பொன், பொருள் ஆடை அணிகலன் கொடுத்து மகிழ்ந்தார்.

அதன் பின் இராமர் தனக்கு துணை நின்றவர்களுக்கு பரிசளிக்க விரும்பினார். முதலில் இராமர் சுக்ரீவனை அழைத்து, தன் தந்தை தசரதர் இந்திரனிடம் இருந்து வென்ற இரத்தின கடகத்துடன் யானைகளையும், குதிரைகளையும் பரிசாக கொடுத்து, கிரீடம் அணிவித்து தன் நன்றியை தெரிவித்தார்.

சுக்ரீவன் இராமரின் கைகளை பற்றி கண்களி ல் ஒற்றி கொண்டான். அங்கதனை அழைத்து, இந்திரன் கொடுத்த மணிக்கடகத்தையும், விலை மதிப்பற்ற முத்தாரங்களையும், குதிரைகளையும், யானைகளையும் பரிசாக கொடுத்தார்.

பிறகு விபீஷணனை அழைத்து, தேவர்கள் கொடுத்த இரத்தின கடகத்தையும், பொன்னும் பொருளும் பரிசாக கொடுத்து வாழ்த்தினார். அதன் பிறகு நீலன், ஜாம்பவான் முதலிய வானர படைத் தலைவர்களுக்கு இரத்தின மாலைகளையும், யானைகளும், குதிரைகளு ம், பொன்னும் பொருளும் கொடுத்தார்.

பிறகு இராமர் அனுமனை அழைத்து, “அனுமனே! நீ எனக்கு தக்க சமயத்தில் உதவி செய்துள்ளாய். உனக்கு ஆயிரமாயிரம் பொரு ட்கள் பரிசாக கொடுத்தாலும் ஈடாகாது. உன்னுடைய வலிமையும், தியாக உதவியும் மேன்மை யானது. உனக்கு என்ன பரிசு கொடுப்பது என்று தெரியவில்லை. அதனால் என்னையே உனக்கு கொடுக்கிறேன்..” எனக் கூறி அனுமனை அன்போடு தழுவிக் கொண்டார். இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.

இராமர் தன் கழுத்தில் இருந்த முத்துமாலை யை எடுத்து, சீதா! என் பரிசளிப்பு முடிந்துவி ட்டது. இந்த முத்துமாலையை நீ விரும்பியவருக்கு பரிசாக அளிக்கலாம் எனக் கூறி சீதையின் கையில் கொடுத்தார். முத்துமாலையை கையில் வாங்கிய சீதை முதலில் பார்த்தது அனுமனைத்தான்.

அனுமனை பார்த்து, “சுந்தரா” என அன்போடு அழைத்தாள். அனுமன் சீதையின் அருகில் வந்து நின்றான். சீதை, முத்துமாலையை அனுமனின் கழுத்தில் அணிவித்தாள் “எனக்கு தக்க சமயத்தில் உதவி செய்த உனக்கு என் பரிசு..” என்றாள். இராமர், ” சீதா.. நீ நான் நினைத்ததை தான் செய்துள்ளாய். பிறகு இராமர் அனுமனை பார்த்து, ” அனுமனே உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்..” என்றார்.

அனுமன், “பெருமானே! நான் வேண்டுவதை தாங்கள் தவறாமல் கொடுக்க வேண்டும்” எனக் கூறிவிட்டு, நான் உங்களின் அடிமையாக இருக்க வேண்டும். என்னை வேண்டுபவர்க ளுக்கு முதலில் உங்கள் நாமமே நினைவுக்கு வர வேண்டும்” எனக் கேட்டான். பிறகு இராமர் புன்னகைத்து விட்டு, ” உனக்கு அவ்வரமே தருகிறேன்..” எனக் கூறினார்.

அனுமனின் இவ்வரத்தை கேட்டுமக்கள் அனை வரும் ஆர்ப்பரித்தனர். இராமரின் முடிசூட்டும் விழா அறுபது நாள் கோலாகலமாக நடந்தது. குகன், சுக்ரீவன், அங்கதன், விபீஷணன், அனுமன் முதலியவர்கள் இராமரின் பட்டாபிஷேக த்தை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.

இராமர், குகன், சுக்ரீவன், அங்கதன், விபீஷணன், அனுமன் முதலியவர்களை அழைத்து, அரசன் இல்லாத நாடு வெறுமையாகிவிடும். ஆதலால் தாங்கள் அவரவர் இருப்பிடத்திற்கு சென்று, உங்களது நாட்டை மேன்மையுடன் நல்லாட்சி புரியுங்கள் என்று கூறி விடை கொடுத்தார்.

இராமரிடம், விடைபெற்ற அவர்கள் இராமரையும், சீதையும். தம்பியர்களையும், வசிஷ்ட முனிவரையும், தாய்மார்களையும் வணங்கி விடை பெற்றனர். அனைவரும் புஷ்பக விமானத்தில் ஏறி, குகன் சிருங்கிபேரத்திலும், சுக்ரீவன் கிஷ்கிந்தையிலும் இறங்கினார்கள். பிறகு விபீஷணன் இலங்கைக்குச் சென்றான். அனைவரும் இராமரின் திருநாமத்தை சொல்லிக் கொண்டு நல்லாட்சி புரிந்தனர்.

இராமர், தம்பிகளுடன் அயோத்தியை நீதி நெறியுடன், ஆட்சி புரிந்தார். இராமரின் அரு ளால் மண்ணுலகம் செழித்து விளங்கியது.

ஜெய் ஸ்ரீ சீதாராம்… ஜெய் ஆஞ்சநேயா…🙏

ஸ்ரீராம… ஜெய ராம… ஜெயஜெய ராமா…🙏

ராம ராம ராம ராம

🪷🪷🪷

🌺ஸ்ரீராம நவமி (30.03.2023)

ஶ்ரீ ராமாஷ்டோத்தர
சத நாமாவளி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

1.ஓம் ஶ்ரீராமாய நம:

2.ஓம் ராமபத்ராய நம:

3.ஓம் ராமசந்த்ராய நம:

4.ஓம் ஶாஶ்வதாய நம:

5.ஓம் ராஜீவலோசனாய
நம:

6.ஓம் ஶ்ரீமதே நம:

7.ஓம் ராஜேந்த்ராய நம:

8.ஓம் ரகுபுங்கவாய நம:

9.ஓம் ஜானகீவல்லபாய நம:

10.ஓம் ஜைத்ராய நம:

11.ஓம் ஜிதாமித்ராய நம:

12.ஓம் ஜனார்தனாய நம:

13.ஓம் விஶ்வாமித்ர
ப்ரியாய நம:

14.ஓம் தாந்தாய நம:

15.ஓம் சரணத்ராண தத்பராய நம:

16.ஓம் வாலிப்ரமதனாய நம:

17.ஓம் வாக்மினே நம:

  1. ஓம் ஸத்யவாசே நம:

19.ஓம் ஸத்யவிக்ரமாய நம:

20.ஓம் ஸத்யவ்ரதாய நம :

21.ஓம் வ்ரததராய நம:

22.ஓம் ஸதா ஹனுமதாச்ரிதாய நம:

23.ஓம் கௌஸலேயாய நம:

24.ஓம் கரத்வம்ஸினே நம:

25.ஓம் விராதவத பண்டிதாய நம:

26.ஓம் விபிஷண பரித்ராத்ரே நம:

27.ஓம் ஹரகோதண்ட கண்ட னாய நம:

28.ஓம் ஸப்ததாலப்ர பேத்ரே நம:

29 ஓம் தஶக்ரீவ ஶிரோஹராய நம:

30.ஓம் ஜாமதக்ன்ய மஹாதர்ப்பதளாய நம:

31.ஓம் தாடகாந்தகாய நம:

32.ஓம் வேதாந்த ஸாராய நம:

33.ஓம் வேதாத்மநே நம:

34 ஓம் பவரோகஸ்ய
பேஷஜாய நம:

35.ஓம் தூஷணத்ரிசிரோ ஹந்த்ரே நம:

36.ஓம் த்ரிமூர்ததயே நம:

37.ஓம் த்ரிகுணாத்மகாய நம:

38ஓம் த்ரிவிக்ரமாய நம:

  1. ஓம் புண்யசாரித்ர கீர்த்தநாய நம:
  2. ஓம் த்ரிலோகாத்மனே நம:

41.ஓம் த்ரிலோகரக்ஷகாய நம:

42 ஓம் தந்வினே நம:

43.ஓம் தண்ட காரண்ய கர்த்தனாய நம:

44.ஓம் அஹல்யா ஶாபஶமனாய நம:

45.ஓம் பித்ரு பக்தாய நம:

46.ஓம் வரப்ரதாய நம:

47.ஓம் ஜிதேந்த்ரி யாய நம:

48.ஓம் ஜிதக்ரோதாய நம:

49.ஓம் ஜிதா மித்ராய நம:

50.ஓம் ஜகத்குரவே நம: ||

51.ஓம் ருக்ஷ வாநரஸங்காதினே நம:

52.ஓம் சித்ரகூடஸமாச்ரயாய
நம:

53.ஓம் ஜயந்தத்ராணவர தாய நம:

54.ஓம் ஸுமித்ராபுத்ர ஸேவிதாய நம:

55.ஓம் ஸர்வதேவாதி தேவாய நம:

56.ஓம் ம்ருத வானரஜீவிதாய நம:

  1. ஓம் மாயாமாரீ சஹந்த்ரே நம:

58.ஓம் மஹாதேவாய நம:

59.ஓம் மஹாபுஜாய நம:

60.ஓம் ஸர்வதே வஸ்துதாய நம :

61.ஓம் ஸௌம்யாய நம:

62.ஓம் ப்ரஹ்மண்யாய நம:

63.ஓம் முனிஸம்ஸ்துதாய நம:

64.ஓம் மஹாயோகினே நம:

65 .ஓம் மஹோதராய நம:

66 ஓம் ஸுக்ரீவே ப்ஸித ராஜ்யதாய நம:

67.ஓம் ஸர்வ புண்யாதிக ஃபலாய நம:

68.ஓம் ஸ்ம்ருத ஸர்வாக நாஶனாய நம:

69.ஓம் ஆதிபுருஷாய நம:

70.ஓம் பரமபுருஷாய நம:

71.ஓம் மஹாபுருஷாய நம:

72.ஓம் புண்யோதயாய நம:

  1. ஓம் தயாஸாராய நம:

74.ஓம் புராண புருஷோத்தமாய நம:

75.ஓம் ஸ்மிதவக்த்ராய நம:

76 ஓம் மித பாஷிணே நம:

77.ஓம் பூர்வபாஷிணே நம:

78.ஓம் ராகவாய நம:

79.ஓம் அனந்த குண கம்பீராய நம:

80.ஓம் தீரோதாத்த குணோத்தமாய நம:

  1. ஓம் மாயாமானுஷசரித்ராய நம:

82.ஓம் மஹாதேவாதி பூஜிதாய நம:

83..ஓம் ஸேதுக்ருதே நம:

84 .ஓம் ஜிதவாராஶயே நம:

85.ஓம் ஸர்வ தீர்த்த மயாய நம:

86.ஓம் ஹரயே நம:

87.ஓம் ஶ்யாமாங்காய நம:

88.ஓம் ஸுந்தராய நம:

  1. ஓம் ஶூராய நம:

90.ஓம் பீத வாஸஸே நம:

91.ஓம் தநுர்த்த ராய நம:

92.ஓம் ஸர்வயஜ்ஞாதிபாய நம:

93.ஓம் யஜ்வனே நம:

94.ஓம் ஜராமரண வர்ஜி தாய நம:

95..ஓம் விபீஷணப்ரதிஷ்டாத்ரே நம:

96.ஓம் ஸர்வாபகுண வர்ஜி தாய நம:

97.ஓம் பரமாத்மனே நம:

98.ஓம் பரஸ்மை ப்ரஹ்மணே நம:

  1. ஓம் ஸச்சிதானந்த விக்ரஹாய நம:

100.ஓம் பரஸ்மைஜ்யோதி ஷே நம:

  1. ஓம் பரஸ்மை தாம்னே நம:

102.ஓம் பராகாஶாய நம:

103.ஓம் பராத்பராய நம:

104..ஓம் பரேஶாய நம:

105.ஓம் பாரகாய நம:

106 .ஓம் பாராய நம:

  1. ஓம் ஸர்வதேவாத்மகாய நம:

108.ஓம் பரஸ்மை நம:

ஓம் ஸ்ரீஸீதா லக்ஷ்மண பரத சத்ருக்ன ஹநுமத் ஸமேத ஸ்ரீராமசந்தர பரப்ருஹ்ம ஸ்வாமினே நம:

இதி ஸ்ரீ ராமாஷ்டோத்திர சதநாமாவளி ஸம்பூர்ணம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராம 🙏

ஜெய் ஸ்ரீசீதாராம் 🙏

🪷🪷🪷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button