பாபா தோல்விப்படம் அல்ல.. அது மிகப்பெரிய டிசாஸ்டர்

பாபா தோல்விப்படம் அல்ல.. அது மிகப்பெரிய டிசாஸ்டர்
பாபா தோல்விப்படம் அல்ல, அது மிகப்பெரிய டிசாஸ்டர் என நடிகை மனிஷா கொய்ராலா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த் திரைக்கதை அமைத்து தயாரித்த திரைப்படம் பாபா. இப்படம் 2002ம் ஆண்டு ஆகஸ்ட் 15ந் தேதி தியேட்டரில் வெளியானது.
இப்படத்தில், ரஜினிகாந்த், மணிஷா கொய்ராலா, நாசர், கவுண்டமணி, எம்.என்.நம்பியார், சுஜாதா, சீமா, ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ்,டெல்லி கணேஷ் ஆகியோர் நடித்திருந்தனர் ஆகியோர் நடித்திருந்தனர்.
ரஜினி அரசியலுக்கு வருவாரா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பு மக்களுக்கு இருந்த நேரத்தில் வெளியான திரைப்படம் பாபா. இந்த படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகள் இருந்ததால், பாபா படம் வெளியான போது திரையரங்கை பாட்டாளி மக்கள் கட்சியினர் சூறையாடினர். பட பெட்டியை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்த சம்பவங்களும் நடந்தன.
நாத்திகராக இருக்கும் ரஜினிக்கு பாபாஜி தோன்றி 7 மந்திரங்களை கொடுக்கிறார். ஆனால், நாத்திகரான ரஜினி அந்த மந்திரம் உண்மைதான என சோதனை செய்து பார்த்து வீணாக்கி விடுகிறார். கடைசியாக அவருக்கு இறைவன் மீது நம்பிக்கை வந்ததா? இல்லையா? என்பது தான் கதை. ஸ்டைலான ரஜினியை பார்த்த ரசிகர்களுக்கு இந்த படம் திருப்தி படுத்தாததால்,படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை.
பாபா படத்தால் நான் அழிந்தேன் இந்நிலையில், பாபா படத்தில் கதாநாயகியாக நடித்த மனிஷா கொய்ராலா அளித்துள்ள பேட்டியில், பாபாவுக்கு முன் நான் பல நல்ல தென்னிந்திய திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன் என்பது உங்களுக்குத் தெரியும். பாபா தோல்விக்குப் பிறகு எனக்கு படவாய்ப்பே வரவில்லை. பாபா படத்தால் நான் அழிந்தேன். பாபா வெறும் தோல்வி படம் அல்ல, அது மிகப்பெரிய டிசாஸ்டர். பாபாவால் மொத்த தென்னிந்திய மொழிகளிலும் எனக்கு மார்க்கெட் சரிந்தன என தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.
பாலிவுட் நடிகையான மனிஷா கொய்லாரா, மணிரத்னம் இயக்கிய மிகப்பெரிய வெற்றிப்படமான பம்பாய் படத்தில் ஷகிலாபானு என்ற கேரக்டரில் நடித்து பெயர் எடுத்தார். அதன்பின், இந்தியன், முதல்வன், ஆளவந்தான் என அடுத்தடுத்த ஹிட்படங்களில் நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்தார். தமிழில் இவர் கடைசியாக மாப்பிள்ளை படத்தில் தனுஷின் மாமியாராக நடித்திருந்தார். அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்பே இல்லாமல் போனது.