ஆன்மீகம்
மகா சிவராத்திரிக்கு சிவன் கோயில்களில் அலைமோதிய பக்தர்கள்

மகா சிவராத்திரியையொட்டி ஆந்திர மாநிலத்தில் உள்ள முக்கிய சிவன் கோயில்களான ஸ்ரீகாளஹஸ்தி காளத்திநாதர், ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர், அமராவதியில் உள்ள அமரலிங்கேஸ்வரர், மகாநந்தி, கோட்டப்ப கொண்டா கபிலேஸ்வரர் உட்பட அனைத்து சிவன் கோயில்களிலும் பக்தர்கள் அலைகடலென திரண்டு சிவ பெருமானை வழிபட்டனர்.
இதேபோன்று, தெலங்கானா மாநிலத்தில் உள்ள வேமுலவாடா ராஜண்ணா கோயில், கினரா ராமலிங்கேஸ்வரர் கோயில், காலேஸ்வரம், ராமப்பா கோயில் கள் உட்பட அனைத்து சிவன் கோயில்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.