ஆன்மீகம்

ராம நவமி ஸ்பெஷல் /உள்ளந்தோறும் ராம பக்தி

ராம நவமி ஸ்பெஷல் உள்ளந்தோறும் ராம பக்தி! இல்லந்தோறும் இராம நாமம் !! – ஸ்ரீ ராம நவமி பதிவு பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில், கிருஷ்ணபட்ச நவமி திதியில் தான் ராம அவதாரம் நிகழ்ந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. மனிதன் உலகில் எப்படி வாழ வேண்டும் என்பதை மக்களுள் ஒருவராக வாழ்ந்து உலகத்துக்கு உணர்த்திய அவதாரமே ஸ்ரீ ராமாவதாரம். ராமர் அவதாரம் எடுத்த நாளையே ராம நவமியாக நாம் அனைவரும் வழிபட்டு வருகின்றோம். அஷ்டமி, நவமி திதிகள் என்றாலே, எந்த ஒரு நல்லக் காரியத்திலும் இறங்காமல், இந்தத் திதிகளை மக்கள் ஒதுக்கவே, அவை இறைவனிடம் சென்று, “மக்கள் எங்களை ஒதுக்குகின்றனரே., நாங்கள் என்ன பாவம் செய்தோம்?” என்று வருந்தினவாம். அதற்கு கருணை வடிவே ஆன இறைவன் “உங்களுக்கும் ஏற்றம் தருகிறேன். அனைத்து மக்களும் உங்கள் இருவரையும் கொண்டாடச் செய்கிறேன்” என்று வாக்களித்தாராம். பகவான் உறுதியளித்தபடி, நவமி திதியில் ராமனாகவும், அஷ்டமி திதியில் கிருஷ்ணனாகவும் அவதரித்து, மக்கள் அவ்விரு திதிகளையும் கொண்டாடச் செய்தாராம். நாளை ஸ்ரீ ராம நவமி. ஒரு இல்,ஒரு சொல், ஒரு வில் என்பதற்கு உதாரணம் ஸ்ரீ ராமர். தமிழகத்தில் இருக்கும் பல கோயில்களின் தல புராணங்களில் ராமர் வழிபட்ட இடம், லிங்கத்தை பிரதிஷ்டை செய்த இடம் என்றெல்லாம் குறிப்புகள் இருக்கின்றன. ஏகபத்தினி விரதன் என்பதற்கு பல தாரங்களை மணக்கும் ராஜ வம்சத்தில் பிறந்தவராக இருந்தாலும், ஒரே தாரத்தை போற்றும் அவதாரமாக இருப்பதால், ராமர் ஓர் இல்லுக்குச் சொந்தக்காரர் ஆனார். அதனால் ராமரின் கால் படாத இடமே தமிழ்நாட்டில் இல்லை என்னும் அளவுக்குத் தல புராணங்கள் பலவற்றில் அவரின் பெருமை வெளிப்படுகின்றது. துஷ்டர்களுக்கு ஒரே பாணம் ஒரு வில்! சரணம் என்று வந்தோர்க்கு அபயம் என்ற வாக்கு ஒரு சொல்! ஜென்மம் முழுவதும் இணைந்து வாழ ஒரு மனைவி ஒரு இல்! இதுதான் ராமனின் அறநெறி ஆகும். ஸ்ரீராம நாமத்திற்கு இணையான ஒரு வேதம் கிடையாது. மகாவிஷ்ணு மனிதனாக அவதரித்து மானிடர்கள் அனுபவிக்கும் அத்தனை துன்பங்களையும் அனுபவித்தவர். அறமே வாழ்வின் ஆன்மிக ஜோதி. அறத்தை வளர்ப்பதற்கும், மனிதனிடம் மறைந்து கிடக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்துவதற்கும் ஸ்ரீமன் நாராயணன் ராமனாக அவதாரம் செய்தார். ராமாவதாரம் பரிபூரண அவதாரம் ஆகும். ‘நாளும், கோளும் நலிந்தோருக்கு இல்லை‘ என்பது பழமொழி. இருப்பினும் பொதுவாக அஷ்டமி, நவமி ஆகிய திதிகளுடன் கூடிய நாட்களில் பக்தர்கள் நல்ல காரியங்களை தொடங்கமாட்டார்கள். இதனால் வருத்தப்பட்ட அஷ்டமியும், நவமியும் திருமாலிடம் சென்று மக்கள் எங்களை புறக்கணிக்கின்றனரே என்று கூறி கண்ணீர் விட்டு முறையிட்டனர். இதனால் உங்கள் இரு திதிகளையும் கொண்டாட ஏற்பாடு செய்கிறேன் என்று பகவான் வாக்களித்தாராம். இதனால் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த அஷ்டமி கோகுலாஷ்டமி ஸ்ரீராமர் அவதரித்த நவமி ஸ்ரீராமநவமி என்றும், என்றும் கொண்டாடப்படுகிறது

. சித்தர் சிவவாக்கியர் எந்த நாமத்தை இடைவிடாது சொன்னால் உயர்நிலையை அடையலாம் என்பதை தனது பாடல்களில் சொல்லுகிறார். சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம் எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே ஓதுவார் தமக்குநல்ல மந்திரம் இதாம்இதாம் ராமராம ராமஎன்னும் நாமமே என்றும் கார கார கார கார காவலூழி காவலன் போர போர போர போர போரினின்ற புண்ணியன் மார மார மார மார மரங்களேழு மெய்தஸ்ரீ ராம ராம ராம ராம ராமவென்னு நாமமே என்றும் நானதேது? நீயதேது? நடுவில்நின்றது ஏதடா? கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே! ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புரம் ஈனதேது? ராமராம ராமஎன்ற நாமமே! என்றும் சொல்கிறார். போததாய் எழுந்ததும் புனலதாகி வந்ததும் தாததாய்ப் புகுந்ததும் தணலதாய் விளைந்ததும் ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றதான அக்கரம் ஓதடாநீ இராமராம ராமவென்னும் நாமமே. டஎன்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் சிவ வாக்கியர் கூறும் மறை ஞான இறைவன் யார் என்பதை நாம் இங்கே அறிந்து கொள்ள முடிகின்றது. ஸ்ரீ ராமர் என்று சொன்னாலே நம் மனதில் பல வித செய்திகள் உணர்த்தப்படும் என்று நம்புகின்றோம். இதில் குறிப்பாக ஸ்ரீ ராமாயணம் அடங்கும். தினமும் ராமாயணம் முழுவதும் படித்தால் எவ்ளோ புண்யம் ? எவ்ளோ பலன் ? எவ்ளோ நல்லது ? ஆனால் நம்மால் தினமும் ராமாயணம் முழுவதும் தினமும் படிக்க முடியுமா ? என்றால் … தினமும் ராமாயணம் முழுவதும் படித்தால் எவ்ளோ புண்யம் ? எவ்ளோ பலன் ? எவ்ளோ நல்லது ? ஆனால் நம்மால் தினமும் ராமாயணம் முழுவதும் தினமும் படிக்க முடியுமா ? என்றால் … நிச்சயம் முடியும் எப்படி ? காஞ்சி பெரியவரால் அருளி செய்யப்பட மிக எளிய அற்புதமான கிடைத்தார் கிடைத்தற்கரிய பொக்கிஷமான வெறும் ஒன்பது வரிகளை மட்டுமே கொண்ட 30 வினாடிகளில் சொல்லி முடித்து அனைத்து பலன்களையும் பெற்று தரக்கூடிய அந்த ஒன்பது வரிகளை மட்டுமே உடைய ராமாயணம் உங்களுக்காக , உலக நன்மைக்காக இதோ ஸ்ரீ ராமம் ரகுகுல திலகம் சிவதனு சாக்ரிஹத சீதா ஹஸ்தகரம் அங்குல்யா பரண சோபிதம் சூடாமணி தர்சனகரம் ஆஞ்சநேய மாஸ்ரயம் வைதேஹி மனோகரம் வானர சைன்ய சேவிதம் சர்வமங்கள கார்யானுகூலம் சததம் ஸ்ரீ ராமச்சந்திர பாலயமாம் ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய்ஸ்ரீராம்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button