இலக்கியம்
தமிழ்நாடு முதல்வர் அவர்களின் பிறந்தநாள் :

01.03.2023
தமிழ்நாடு முதல்வர் அவர்களின் பிறந்தநாள் :
தமிழ்நாட்டை தரணியில் உயர்த்திட
தந்தை வழியில் செயல்படும் தமிழ்நாட்டின் தலைவரே!
முத்தமிழ் வித்தகர் வழியில்
முதல்வரின் பணியினை
செம்மைப்படுத்தும் சிங்கமே!
சொல்லிலும் செயலிலும் தந்தையின் பண்பாடு!
சுடராய் ஒளிவீசும் தமிழென்ற உணர்வோடு!
எடுக்கும் காரியங்கள் எதிலும் தெளிவு
எப்போதும் இயல்பாய்
இருக்கும் பணிவு
தமிழர் நலனைச்
சீராக்கும் நல்குணம்
இத்தரணியில் உயர்வினையே
சிந்திக்கும் உம் மனம்
அரசியல் துறையில் பல கால அனுபவம்
அன்போடு எவரையும் நேசிக்கும் பக்குவம்
நல்லாட்சி மலர தொலைநோக்குப் பார்வைகள்
நலம் காணும் திட்டம்! மேன்மையான கொள்கைகள்!
பிறந்தநாள் காணும் இனிய இந்நாளில்
சிறந்து விளங்குவீர் வாழ்வில் எந்நாளும்
வாழ்க வளமுடன் மகுடம் தாங்கியே
வாழ்க நலமுடன் என்றும் உயர்வை நோக்கியே!



முருக.சண்முகம்
அய்யயப்பன்தாங்கல் காஞ்சிபுரம் மாவட்டம்