திரு மு க ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள்.01.03.2023நினைவுக் குறித்து சில பதிவுகள்

மு க ஸ்டாலின் அவர்களின் நினைவுக் குறித்து சில பதிவுகள்.
இன்று தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள்.01.03.2023
மு க ஸ்டாலின் அவர்களின் நினைவுக் குறித்து சில பதிவுகள்.
டாக்டர் கலைஞர் ஐயா அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது, ஸ்டாலின் எதிலும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டதில்லை. தலைவரின் கண் அசைவு கண்டு காரியமாற்றுவார். அதைக் கூட பின்னணியில் இருந்து தான் செய்து முடிப்பார். ஆனால் காலம் அவரை முன்னிலையில் அடையாளம் காட்டிக் கொண்டே இருக்கிறது. அதோ அந்த இளைஞர் தான் எதிர்கால வைகறை என்று முகவரி சொல்லிக் கொண்டு இருக்கிறது.
2006 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வந்தது.அதுவரை தமிழகத்தில் மூச்சுத் திணறி அழுத்திக் கொண்டிருந்த இருள் விலகியது. மீண்டும் திமுக ஆட்சிப்பீடம் ஏறியது. ஆயிரம் விளக்கு தொகுதியில் ஸ்டாலின் வெற்றி பெற்றார்.
இந்த முறையாவது அமைச்சரவையில் ஸ்டாலின் இடம் பெறுவாரா? ஏக்கத்தோடு தமிழகம் கேட்டது.ஏனெனில் தகுதியான ஒருவருக்கு உரிய நேரத்தில் அங்கீகாரம் இல்லை என்றால் அது பாலையில் நிலவொளியாகி விடும்.
ஏன் இன்னும் அமைச்சரவையில் இடம் பெறவில்லை என்பது தான் தமிழகத்தின் ஆதங்கமாக இருந்தது.
இருமுறை மாநகர மேயராகி, உள்ளாட்சி நிர்வாக நுணுக்கங்களை அறிந்து கொண்டு தொகுத்து கொண்ட இவருக்கு உள்ளாட்சி அமைச்சராக்கினார் தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்கள்.
உள்ளாட்சி அமைச்சுத் துறையில் இவரது பணி மேம்பட்டிருந்தது.
தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு. க.ஸ்டாலின் அவர்கள் இருந்து வருகிறார்.
நம் நாடு நல்லாட்சி பெறட்டும்..
