மணியம்மை பிறந்த தினம் இன்று

மணியம்மை பிறந்த தினம் இன்று (மார்ச்.10)💐
தமிழகத்தில் நடந்த திருமணங்களிலேயே அதிக விமர்சனங்களுக்கு உள்ளானது என்றால் மணியம்மையின் திருமணம் தான். இன்றைக்கு ஆட்சியில் உள்ள திமுக என்ற அரசியல் கட்சி தொடங்கப்படுவதற்கு காரணமும் அவரது திருமணமே.
பெரியார் தனக்கு பிறகு கழகத்தின் சொத்துகளுக்கு ஒரு வாரிசு வேண்டும் என்று முடிவு செய்தார். அப்படிதான் பெரியார் தம் வாரிசாக மணியம்மையை ஏற்க முடிவு செய்தார். ஆனால் அப்போதைய இந்திய சிவில் சட்டத்தின் படி ஒரு பெண்ணுக்கு தத்தெடுக்கும் உரிமையும் இல்லை. தத்து போகும் உரிமையும் இல்லை. இதனால் இரத்த உறவுகளுக்கு மட்டுமே வாரிசாக ஏற்கும் வகையில் சட்டம் இருந்தது. ஆனால் பெரியாரின் மனைவி நாகம்மை ஏற்கனவே மறைந்திருந்ததார். அவர்களுக்கு பிறந்த குழந்தையும் இறந்தே பிறந்திருந்ததால் வேறு வழியின்றி பெரியார் தன்னை விட 40 வயது இளைய மணியம்மையை திருமணம் செய்து கொண்டார்.
இது அன்றைய நாட்களில் தமிழகத்தில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனால் அதிருப்தி அடைந்த அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட திராவிடர் கழக தொண்டர்கள் பிரிந்து சென்று திராவிடர் முன்னேற்ற கழகத்தை தொடங்கி தேர்தல் அரசியலில் பங்கேற்றனர் என்பதே வரலாறு