பார்கின்சன் எனப்படும் உலக நடுக்குவாத நாள்

பார்கின்சன் எனப்படும் உலக நடுக்குவாத நாள்
ஏப்ரல் மாதம் 11-ந் தேதி ‘சர்வதேச பார்க்கின்சன் தினம்’ கடைப்பிடிக்கப் படுகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 11-ந் தேதி ‘சர்வதேச பார்க்கின்சன் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. பார்க்கின்சன் நோய் பற்றி நம் அன்புக்குரியவர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சமூகத்துடன் வெளிப்படையாக பேசுவதை ஊக்குவிப்பதே இந்நாளின் நோக்கம்.
*பார்கின்சன் என்றால் என்ன?*
பார்கின்சன் என்பது, மத்திய நரம்பு மண்டலத்தைப் (Central Nervous System) பாதிக்கும் நோய்,
*பார்கின்சனில் வகைகள் உள்ளதா?*
பார்கின்சனிஸம் என்று ஒரு வகை உண்டு. சில மருந்துகளாலும், வேறு சில நரம்பு மண்டல நோய்களாலும், பார்கின்சன் போன்ற அறிகுறிகளை காட்டும் நோய் இது. மறதி நோய், மூளை காய்ச்சல் நோய், பக்கவாதத்தின் சில நிலைகள், கார்பன் மோனாக்சைடு நச்சு, போன்றவை இந்த நோய்க்கு காரணம்.
*எதனால் ஏற்படுகிறது?*
நரம்புத் திசுக்கள் பாதிப்பதால், இந்நோய் உருவாகிறது. இந்த நோயால் மூளையில் சப்ஸ்சான்டியா நிக்ரா substantia nigra என்ற பகுதியில் உள்ள நரம்புத் திசுக்கள் அழிகின்றன. அந்த இடத்தில்தான் உடல் அசைவு, செயல்பாடுகளை கட்டுப்படுத்தும், டோப்பமைன் என்ற புரதம் உருவாகிறது.
*இந்த நோய் ஏற்படும். அறிகுறிகள் என்ன?*
பொதுவாகக் கால், கை, தாடை, முகம் போன்றவற்றில் நடுக்கம்; செயல்பாடுகளில் வேகம் குறைந்த உணர்வு; கை, கால்கள், முதுகுப் பகுதியில் இறுக்கம்; ஒரு செயல்பாட்டை நேர்த்தியாக செய்வதில் சிரமம் இருக்கும்.
*பார்கின்சன் நோய்க்கு சிறப்பு மருத்துவர்கள் இருக்கின்றனரா?*
உடல் அசைவை துல்லியமாக கணிக்கும் நிபுணர்கள் (Movement Disorder Specialist) இருக்கின்றனர்.
*பார்கின்சன் பாதிப்பை எவ்வாறு கண்டறிகின்றனர்?*
நரம்பியல் அறிகுறிகளை வைத்தும், ஒருவருடைய முக பாவனை எப்படி இருக்கிறது, உட்கார, நிற்க, நடக்க முடிகிறதா என்பதை பரிசோதித்தும் பாதிப்பை கண்டறியலாம்.
*பரிசோதனைகள் என்ன?*
இதற்கென்று பிரத்யேக பரிசோதனைகள் இல்லை என்றாலும், லிவோடோபா (levodopa) என்ற மருந்தை தற்காலிகமாக கொடுத்து, நோயை உறுதி செய்வர்.
*பார்கின்சன் என பெயர் வரக் காரணம்?*
இந்த நோயை Parkinson என்ற ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்தார். அதனால், அவருடைய பெயரிலேயே, பார்கின்சன் நோய் என்று அழைக்கப்படுகிறது.
*இதன் பாதிப்புகள் என்னென்ன?*
பார்கின்சன் நோயில், துரிதமாகச் செயல்படும் நிலை குறையும். முக பாவனைகள் குறையும். பல் தேய்ப்பதில், நடப்பதில், பேசுவதில் சிரமம் ஏற்படும். தசைகளில் இறுக்கம் ஏற்படும். நிமிர்ந்து நிற்க இயலாத நிலை உண்டாகும். நாற்காலியில் இருந்து எழுந்திருக்கும்போதோ, நிற்கும்போதோ, திடீரென்று விழுவதற்கு வாய்ப்பு உண்டு. இதற்கு ரெட்ரோபுல்ஷன் (retropulsion) என்று பெயர்.
*பார்கின்சன் பாதிப்பிற்கு சிகிச்சைகள் என்ன?*
முற்றிலும் நோயை குணப்படுத்தக்கூடிய சிகிச்சைகள் இல்லை. ஆனால், பார்கின்சனால் ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்த, சிகிச்சைகள் உள்ளன.
பார்கின்சன் குறித்து மேலும் அறிய https://www.aanthaireporter.com/international-parkinsons…/