சினிமா

பாடகர் அருண்மொழி

பாடகர் அருண்மொழி

எண்பதுகளின் இறுதியில் இருந்து தொண்ணூறுகளின் ஆரம்ப காலங்கள் வரை தமிழ்த்திரையிசைப்பாடல்களில் பாடகர் அருண்மொழியை அவர்களின் நிறைய அருமையான மெலடிப் பாடல்கள் என்னை ஈர்த்தது.. இசைஞானியின் இசையில் அவருக்குக் கிடைத்த மெட்டுக்கள் எல்லாமே பிரமாதம்.

., இசைஞானி அருண்மொழி அவர்களுக்கு கொடுத்த முகவரி தான் இன்று வரை அவரின் பேர் சொல்ல வைத்திருக்கின்றது.

அவர் ஒரு பேட்டியில்- மலையாளப் படத்திற்கு பயிற்சி செய்து கொண்டிருக்கும் போதுதான் இளையராஜா அவர்கள தன்னுடைய புல்லாங்குழல் வாசிப்பை கேட்டு சேர்த்துக் கொண்டார். எனவும் அவருடன் சேர்வதற்கு முன்னால் பெரும்பாலான எல்லா இசையமைப்பாளர்களுடனும் பணியாற்றி இருந்ததாகவும் சொல்கிறார்.

– ‘ஒரே முறை உன் தரிசனம்’ இளையராஜாவுடன் அவர் சேர்ந்த முதல் பாடல். அதில் வரும் புல்லாங்குழல் இசை அவருடையது.

– பாடகரானதும் சுவையான அனுபவம் தான்.என்கிறார் ராஜா பாடகர்களுக்கு ரிட்டர்ன் நோட்ஸ் வெஸ்டர்னில் இருக்கும். ஆரம்பத்தில் புரியவில்லை.என்றாலும் பின்னர் அதை தானே கற்றுக்கொண்டு மற்றவர்களுக்கு விளக்கும் அளவுக்கு தேறியதையும் அப்படி வாய்ஸ் ரூமில் தான் பாடிக்காட்டுவதை ஹெட்போனில் ராஜா சார் கேட்டு கங்கை அமரன் பாடிய ஒரு பாடலை என்னை பாட வைத்து வாய்ஸ் தேர்வு செய்ததாகவும் சொல்கிறார். அந்த படம் வெளிவராமல் போனலும் அடுத்த நாள் சூரசம்ஹாரம் பட பூஜை. அதில் பாடி அருண்மொழி என ராஜாவால் பெயரிடப்பட்டுள்ளார் . வாலியும் ராஜாவும் சேர்ந்து இட்டப் பெயர். அன்று அவர் பாடிய பாடல் தான் ‘நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி’. அந்த ப்படத்தில் தில் எல்லாப் பாடல்களும் இவர்தான் பாடியுள்ளார் அது பெரிய ஹிட் ஆனது.

நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி

. கமலுக்கு கொஞ்சமும் ஒத்து வராத குரலாக இருந்தாலும் . பாடலை தனியாகக் கேட்கும் பொழுது நல்ல இனிமை. மென்மையான பாடல்.

திரைப் படம்: சூர சம்ஹாரம்

நடிப்பு: கமலஹாசன், நிரோஷா

இசை: இளையராஜா

பாடியவர்கள்: அருண்மொழி, K S சித்ரா

• நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி

இனி நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி

தேவலோகம் வேறு ஏது தேவி இங்கு உள்ள போது வேதம் ஓது

நான் என்பது நீ அல்லவோ தேவ தேவா

இனி நான் என்பது நீ அல்லவோ தேவ தேவா

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பாவை உந்தன் கூந்தல் இன்று போதை வந்து ஏற்றும் போது

பார்த்து பார்த்து ஏங்கும் நெஞ்சில் வந்திடாத மாற்றம் ஏது

பார்வை செய்த சோதனை நாளும் இன்ப வேதனை

காதல் கொண்ட காமனை கண்டு கொண்டு நீ அணை

கூடினேன் கொண்டாடினேன் என் கோலம் வேறு ஆனேன்

தாவினேன் தள்ளாடினேன் உன் தாகம் தீர்க்கலானேன்

பாலும் தெளிதேனும் பறிமாற நேரம் வந்ததே

நான் என்பது நீ அல்லவோ தேவ தேவா

இனி நான் என்பது நீ அல்லவோ தேவ தேவா

தேவலோகம் வேறு ஏது தேவி இங்கு உள்ள போது வேதம் ஓது

நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி

ஆசை கொண்ட காதல் கண்கள் பாட வந்த பாடல் என்ன

ஆடுகின்ற போது நெஞ்சில் கூடுகின்ற கூடல் என்ன

நானும் உந்தன் தோளிலே வாழுகின்ற நாளிது

தோளில் இந்த நாளிலே ஆடுகின்ற பூவிது

அன்னமே என் ஆசையோ உன் ஆதி அந்தம் காண

கண்ணிலே உண்டானதே என் காதல் தேவி நாண

போதும் இது போதும் இளம் பூவை மேனி தாங்குமா

நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி

இனி நான் என்பது நீ அல்லவோ தேவ தேவா

தேவலோகம் வேறு ஏது

தேவன் இங்கு உள்ள போது

வேதம் ஓது

நான் என்பது நீ அல்லவோ தேவ தேவா

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button