இன்று உலக அன்னையர் தினம்

இன்று உலக அன்னையர் தினம்.
” அம்மா” என்ற முதல் வார்த்தை அறியாப் பிள்ளையிலும் நாம் உச்சரித்தோம்.
உதட்டில் இருந்து வந்த வார்த்தை அல்ல அன்று
உள்ளத்தில் இருந்து தானாய் வந்தது என்று உணர்வோம் இன்று.
எல்லோரும் அம்மாவின் அரவணைப்பில் தான் வாழ்ந்தோம்…
நம் தாயை முதலில் நினைத்து பெருமை கொள்வோம்.
உலகத்திற்கு அன்னையாய் இருந்த
” அன்னை ” தெரசாவையும் நினைவில் கொள்வோம்.
1910, ஆகஸ்ட் திங்கள் 26 ஆம் நாள் அல்பேனியாவில் பிறந்தவர் தெரசா அவர்கள்.
இளம் வயது முதல் பிறருக்கு தொண்டு செய்வது முக்கிய குறிக்கோள் என எண்ணம் வளர்த்தவர்.
தமது கிருத்துவ மதத்தின் மூலமாக கல்கத்தா நகருக்கு வந்து ஆசிரியர் பணியை மேற்கொண்டார்.
கல்கத்தாவில் உள்ள மக்களின் வறுமை நிலையை கண்டு மிகவும் கலக்கமுற்று, அங்குள்ள மாணவ, மாணவிகளுக்கு கல்வித்தரம் உயர்த்தவும், வறுமைக்கோட்டில் உள்ள மக்களின் நிலை உயர்த்தவும் கருணை இல்லம் ஒன்றை அமைக்க பல்வேறு சிரமங்கள் மேற்கொண்டும், நோயுற்ற மக்களின் நிலையறிந்து அவர்களுக்கும் தொண்டு செய்து, மிகப் பொறுமையுடன் கவனித்து தமது வாழ்நாள் முழுவதும் உதவிகள் செய்து பிறருக்காக தமது வாழ்வினை அர்ப்பணித்து உலகம் போற்றும் அன்னை தெரசாவாகவும், அன்பென்றால் என்னவென்று அதற்கான பொருளுக்கு உயர்ந்த அர்த்தமளித்து தொண்டின் வழியே மக்களை கவர்ந்து, உலகம் போற்றும் அன்னையாய் வாழ்ந்தவர்.
உலக அன்னையர் தினமான இன்று அன்னை தெரசாவின் தொண்டையும் செயலையும் நினைவில் கொள்வோம்.
muruga shanmugam
