தகழி சிவ சங்கரன் பிள்ளை

தகழி சிவ சங்கரன் பிள்ளை காலமான தினமின்று
நவீன மலையாள இலக்கியத்தில் யதார்த்த வகை எழுத்தைத் தொடங்கி வைத்தவர் என்று புகழப்படும் தகழி சிவசங்கரன் பிள்ளை, ஒடுக்கப்பட்ட மற்றும் பட்டாளி மக்களுக்காக தன் படைப்புகளில் தந்த இடம் மலையாள இலக்கியத்தின் போக்கை யதார்த்தம் நோக்கித் திருப்பியது. இவரது ‘செம்மீன்’ நாவல் இந்தியாவின் சிறந்த இலக்கியப் படைப்புக்கான சாகித்ய அகாடமி விருதைப் பெற்றது. அதேபோல் யுனெஸ்கோவால் தேர்ந்தெடுக்கப்பட்ட செம்மீன் 50க்கும் அதிகமான உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது. இதனால் தகழி உலகப்புகழ் எழுத்தாளர் ஆனார்.
தகழி தன் 13 ஆம் வயதில் முதல்கதையை எழுதினார். கேசரி பாலகிருஷ்ணபிள்ளை வழியாக முற்போக்கு எழுத்தில் ஈடுபட்ட தகழி யதார்த்தவாத அழகியல் கொண்ட முற்போக்கு படைப்புகளை எழுதினார். அவர் பிறந்த நிலப்பகுதி குட்டநாடு என்று அழைக்கப்பட்டது. அதைப்பற்றி விரிவாக எழுதியமையால் குட்டநாட்டின் இதிகாசக்காரர் என்று அவர் சிறப்பிக்கப்பட்டார்
1934ல் வெளிவந்த தியாகத்தின் விலை என்ற நாவல் அவரது முதல் பெரும் படைப்பாக அமைந்தது. 600 சிறுகதைகளை எழுதினார். வெள்ளப்பொக்கத்தில் என்ற அவரது கதை மிகப்பிரபலமான ஒன்று.
இவரது பெரும்பாலான நாவல்கள் திரைப்படங்களாக வந்தன. இரண்டு இடங்கழி, அனுபவங்ஙள் பாளிச்சகள், அடிமகள், ஏணிப்படிகள் போன்றவை முக்கியமான படங்கள். ஏணிப்படி என்ற நாவலுக்காக கேந்திர சாகித்திய அக்காடமி விருது வழங்கப்பட்டது. 1984ம் ஆண்டுக்கான ஞானபீட விருதை கயிறு என்ற நாவலுக்காக பெற்றார்.
முன்னதாக விடுதலைப் போராட்ட இயக்கத்திலும் பங்கு பெற்ற இவரது செயல்பாடுகள் அனைத்தும் காவல்துறையினரின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டன. எனவே திருச்சூர் அருகிலுள்ள “தடக்கன்சேரி” எனும் ஊரில் இவர் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டவராக்கும்