மஹா பெரியவர்”

மஹா பெரியவர்”
ஒரு இஸ்லாமிய சகோதரர்,
ஏதோவொரு வேலை நிமித்தமாக
காஞ்சி சங்கர மடத்துக்குச்செல்கிறார்…
பெரியவர் நலம் விசாரிக்கிறார்…பின்பு,
– தொழுவதெல்லாம் உண்டா ?
– ஆமாம் ஐயா,
ஐந்து வேளையும் தவறாமல் தொழுவேன்.
– ஏன் ஆறாம் வேளையை விட்டு விட்டீர் ?
– ஆறாம் வேளையா…
இஸ்லாமிய சகோதரர் முழிக்கிறார்…
பெரியவர் தொடர்கிறார்…
ஆறாம் வேளைத்தொழுகையான,
“தஹஜ்ஜத்து” தொழுகை,
எவ்வளவு சிறப்பு மிக்கது என்று,
நபிகள் நாயகம் சொல்லியிருக்கிறாரே,
படித்ததில்லையா…?
“ப்ரம்ம முகூர்த்த வேளையில்,
ஊரெல்லாம் உறங்கிக்கொண்டிருக்கும்
பொழுதில், இறைவனுக்காக,
தூக்கத்தை உதறித்தள்ளி, விழித்தெழுந்து, இறைவனைத்தொழுது,
அவனிடம் கையேந்தி அழுதால்,
கேட்டது கிடைக்குமே,
அற்புதமான “தஹஜ்ஜத்து” தொழுகையை விட்டு விடாதீர்,
இந்துக்களுக்கு
ஆறுகால பூஜை போல்,
இஸ்லாமியர்கள் மேன்மையுற
ஆறு வேளை தொழுகை”…என்று கூற,
இஸ்லாமிய சகோதரர்
நெக்குறுகிப்போனார்…
மனிதனை மேன்மைப்படுத்தும்,
எல்லா மத தத்துவங்களையும்
கற்றறிந்து, தெளிந்தவர் தான் ஞானி.
மஹா பெரியவரைப்போன்ற
ஞானிகள், இன்றில்லை…
இந்து மதம் உட்பட,
எந்த மதத்தைப்பற்றியுமே எவ்வித புரிதலும் இல்லாமல், தாடி வைத்து
தலைப்பாகை கட்டியவரெல்லாம்,
சாமியார்களென்றும், ஞானிகளென்றும்,
யோகிகளென்றும், சத்குருக்கள் என்றும்,
தங்களைத்தாங்களே நினைத்துக்கொண்டு,
அரசியல்வாதிகளின் பேராதரவோடு,
மக்களை ஏய்த்துப்பிழைப்பதிலேயே
குறியாக இருக்கின்றனர்…
எத்தனை காலம் தான்
ஏமாற்றுவார் இந்த நாட்டிலே,
நம் நாட்டிலே, சொந்த நாட்டிலே…
சத்தியம் தவறாத உத்தமர் போலவே
நடிக்கிறார்,
சமயம் பார்த்து பல வழியிலும் கொள்ளை
அடிக்கிறார்…
– ராஜ்கிரண்