போலீஸ்காரங்க புடுச்சாலும் லைசென்ஸ் இல்லன்னு கவலைப்பட வேண்டாம்

போலீஸ்காரங்க புடுச்சாலும் லைசென்ஸ் இல்லன்னு கவலைப்பட வேண்டாம்
நாம் சாலைகளில் செல்லும் போது, சில இடங்களில் டிராஃபிக் போலீசார், வருவாய்த் துறையினர், ஆர்டிஓ உள்ளிட்ட அதிகாரிகள் வாகனங்களை நிறுத்திச் சோதனையிடுவதைப் பார்த்திருப்போம். இப்படியாக அரசு அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபடும் போது நாம் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இப்படியாக வாகன சோதனையின் போது அதிகாரிகளுக்கு வாகனம் மற்றும் நமது ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவற்றைக் கேட்டால் அதை நாம் அவர்களிடம் காண்பிக்க வேண்டும். ஆனால் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் வாகனங்களில் இந்த ஆவணங்களை எல்லாம் எப்பொழுதும் வைத்திருப்பது கடினமானது.
அதனால் சிலர் ஆவணங்களை எல்லாம் தங்கள் செல்போனில் ஏற்றி வைத்துக்கொண்டு அதைக் காட்டுவார்கள். ஆனால் சட்ட விதிமுறைப்படி புகைப்படங்கள் எடுக்கப்பட்ட ஆவணங்களை அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்கு எல்லாம் தீர்வாக இருப்பது தான் டிஜி லாக்கர் ஆப்
இது ஒரு கிளவுடு அடிப்படையில் இயங்கும் ஒரு ஆப் இதில் அரசு ஆவணங்களை டிஜிட்டல் முறையில் சேமித்து வைத்துக்கொள்ளலாம். ஆதார் கார்டு முதல் நமது டிரைவிங் லைசென்ஸ் வரை சேமித்து வைக்க முடியும் இதற்காக 1 ஜிபி வரை இட வசதி வழங்கப்படுகிறது. டிஜி லாக்கரில் எப்படி டிரைவிங் லைசென்ஸை சேமித்து வைப்பது எனக் காணலாம். டிஜிலாக்கர் ஆப்பிற்குள் நுழைந்து கொள்ளுங்கள். அதில் உங்களுக்கென பிரத்தியேகமாக ஒருகணக்கை உருவாக்கிக்கொள்ளுங்கள். பின் அந்த கணக்கிற்குள் உள்நுழைந்து கொள்ளுங்கள். அதில் Issued Documents என்ற ஆப்ஷனிற்குள் சென்று Get more Issued Documents என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள். பின்னர் Pull documents என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அதன்பின்னர் மத்திய அரசு என்ற ஆப்ஷனை தேர்வு செய்து இறுதியாகச் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை என்பதைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். பின்னர் டாக்குமெண்ட் டைப் என்பதில் டிரைவிங் லைசென்ஸ் என்பதைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். அதில் அதில் கேட்கப்படும் பெயர், பிறந்த தேதி, டிரைவிங் லைசென்ஸ் எண் உள்ளிட்ட தகவல்களைக் கொடுத்தால் உங்கள் டிரைவிங் லைசென்ஸ் குறிப்பிட்ட ஆப்பில் சேமிக்கப்படும். இதை இப்பொழுதே உங்கள் ஆப்பில் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். இந்த ஆப்பை பயன்படுத்துவது மூலம் எல்லா நேரங்களிலும் ஒரிஜினில் டாக்குமெண்ட்களை வாகனங்களில் வைத்திருக்க வேண்டாம். தேவையான ஆவணங்களை இந்த ஆப்பில் மூலம் காட்டினாலே போதுமானதாக இருக்கும். ஒருவேளை நீங்கள் உங்கள் ஆவணங்களில் உள்ள தகவல்களை நீங்கள் மாற்றினால் கூட உடனடியாக அது உங்கள் ஆப்பில் உள்ள தகவலில் மாற்றப்படும். மேலும் இது கிளவுடு சேமிப்பில் இருப்பதால் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் இருக்கும். அதே நேரம் நீங்கள் அரசுக்கு ஏதாவது விண்ணப்பம் செலுத்தும் போது அதற்கான ஆவணங்களை நீங்கள் நேரடியாக வழங்க வேண்டியதில்லை. இதை டிஜிலாக்கர் மூலம் அதைப் பகிர்ந்தாலே அதன் மூலம் ஆவணங்களைச் சரி பார்க்க முடியும் இதனால் நேரமும், எனர்ஜியும் மிச்சமாகிறது.
இந்த ஆப்பை இந்தியா முழுவதும் தற்போது வரை 8 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஆப்பில் நீங்கள் டிரைவிங் லைசென்ஸ் மட்டுமல்ல, ஆதார் கார்டு, யூஏஎன் கார்டு, பென்சன் கார்டு உள்ளிட்ட பல ஆவணங்களை இணைத்துக்கொள்ள முடியும்.